ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145

வடக்கு மக்களுக்கு வரப்பிரசாதம்: வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும், வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் உதவும் முகமாக அரசாங்கம் வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.வடபகுதியில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கொழும்பிற்கு வந்து பலநாட்கள் தங்கியிருந்து பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் இத்திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது.

விவரம் »

நெல் மற்றும் காய்கறிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த உர மானிய முறையை படிப்படியாக அனைத்துப் பயிர்வகைகளுக்கும் ஏற்புடையதான வகையில் மறுசீரமைப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

கொஸ்கொட விபத்தில் சிறுமி துடிதுடித்து மரணம்

பெரும் பதற்றம்: பஸ் எரிப்பு

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து நேற்றுக் காலை கொஸ்கொடை பகுதியெங்கும் பெரும் களேபர மடைந்ததுடன் விபத்துக்கு காரணமான பஸ் ஊர் மக்களால் எரிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

விவரம் »

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதை  தடுக்க பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு

தேர்தல் ஆணையாளர்

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல்கள் திணைக்களத்துடன் இணைந்ததாக பொலிஸ் முறைப்பாட்டு பிரிவொன்று நேற்று முதல் செயற்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.இந்த பொலிஸ் முறைப்பாட்டு பிரிவானது சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கீழ் செயற்படுமென அவர் மேலும் கூறினார்.

விவரம் »

நுளம்பு ஒழிப்புக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.நாடெங்கிலும் நேற்று ஆரம்பமான நுளம்பு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பணிகளுக்கு சில இடங்களில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவரம் »



2600வது சம்புத்தத்துவ ஜயந்தியையொட்டி வெள்ளி நாணயமொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. எட்டாயிரம் ரூபா பெறுமதியான இரண்டாயிரம் நாணயங்களை புத்தசாசன மத விவகார அமைச்சின் ஊடாக பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் வெளியிட்டபோது பிடிக்கப்பட்ட படம். விசும்பாயவில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமர் ஜயரட்ன தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியு. கணேகலவுக்குக் கையளிப்பதைப்
படத்தில் காணலாம்.