வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

கடந்த யுத்த காலத்தில் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்று அங்கு முகாம்களில் வசித்த 52 பேர் கொண்ட இலங்கையர் குழுவொன்று நேற்று விமானம் மூலம் தாய்நாடு திரும்பினர். இவர்கள் இந்தியாவில் முகாம்களில் வசித்த காலத்தில் அங்கு பிறந்த குழந்தைகளும் இந்த குழுவில் அடங்குகின்றனர். மன்னார், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இப்போது தாய்நாடு திரும்பியுள்ளனர். (படம்- குமாரசிறி பிரசாத் விமான நிலைய நிருபர்)


Send money to Sri Lanka - www.timesofmoney.com


இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 951
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்
கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.



Advertisments





 

வடக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

* அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மீள ஆரம்பம்

* தனியார் ஒத்துழைப்புடன் உற்பத்தித்திறன் மேம்பாடு

* இலங்கை, இந்தியா, ஐ.நா.969 மில்லியன் ரூ. ஒதுக்கீடு

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பாரிய வேலைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைய யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிக்கவும் தனியார்த் துறையின் பங்களிப்புடன் வாழ்வாதார மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

விவரம் »
 

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் வேண்டும்

பொருளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.சமூக ரீதியான மாற்றமொன்றிற் காக சகல தரப்பின ரதும் அர்ப்ப ணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழு ப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவரம் »
 

மாணவர் ஆர்ப்பாட்ட பின்னணியில் வங்குரோத்து அரசியல் சக்திகள்

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருவதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வங்குரோத்து அரசியல் சக்திகள் மறைமுகமாகச் செயற்படுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நாரஹேன்பிடியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

விவரம் »
 

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றங்கள் விஷேட ஏற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட மூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவுற்றதும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இச்சட்ட மூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.

விவரம் »