வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்; அமெரிக்கா கவலை

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்; அமெரிக்கா கவலை

பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் - அல் கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான பண உதவிகளை செய்து வருகிறது.

ஆனால் அந்த பணத்தை பாகிஸ்தான் வேறு வழிகளில் செலவு செய்கிறது.

அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில் அடைக்கலம் கொடுத்து வருகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்று இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பின்லேடனுக்கு, பாகிஸ்தான் உளவுத்துறை தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பி. ஜே. குரோவ்லி கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானில் சில பகுதியில் இப்போதும் தீவிரவாதிகளின் புகலிட மாகவே உள்ளது. குறிப்பாக வடக்கு வர்கிஸ்தான் பகுதியில் அவர்கள் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் மீது பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் பாகிஸ்தான் இராணுவ தளபதி கயானி தலைமையிலான குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளது. அவர்களிடமும் அமெரிக்கா தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»