வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

ஐப்பசி பௌர்ணமியில் அன்னதானம்

ஐப்பசி பௌர்ணமியில் அன்னதானம்

இந்து வித்யாநிதி பிரம்மஸ்ரீ, அகில இலங்கை சிவப்பிராமண சங்கக் காரியதரிசி.

காசியிலே அம்பாள் அன்னபூரணியாக வீற்றிருந்து காசி மயானத்தைக் காத்துவரும் சிவபெருமானுக்கு அன்னத்தை வழங்குகின்றாள். இவ்வரிய காட்சி உலகில் உள்ள சகருக்கும் அன்னபூரணி அம்மையின் அன்னம் அமுதாக என்றும் உள்ளது என்பதை விளக்குகிறது. இலங்கையில் தொண்டைமானாற்றில் முருகப் பெருமான் அன்னதானக் கந்தனாக வீற்றிருக்கின்றான். நாம் வழமையாக என்ன கூறுவோம்? இறைவன் இட்ட பிச்சையே எமது உணவான அன்னம். அதாவது சாதமேயாகும்.

கோயிலில் அபிஷேகத்திலே அன்னாபிஷேகம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதேபோன்று பிரசாத வகைகளோ அந்தம். சாதம், சர்க்கரைச் சாதம், புளிச்சாதம், எள்ளுச்சாதம் மிளகுச் சாதம் ஆகியன சிவசிங்கத் திருமேனியின் ஐந்து முகங்களுக்கும் நைவேதனம் ஆகின்றன. நமது குல தெய்வ வழிபாட்டில் குல தெய்வத்துக்கான பொங்கல் சமைத்து படைத்து முழு ஊருமே சேர்ந்து வழிபடும் பாங்கு அற்புதமானது. ஊர் ஒற்றுமை உள்ளது. எல்லோருக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகின்றது.

இந் நோக்கில் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறைவு செய்ய உற்றார் உறவினரையும் அழைத்துச் சென்று அன்னம் சமைக்கும் ஒற்றுமை அத்தேவஸ்தான துக்கே உரியது ஆகும். அதேபோல அன்னதானக் கந்தனுக்குத் தினமும் சாதத்தின் மேலே கறி வைத்துப் பூசை செய்யும் வழமையும் உள்ளது. தைப்பொங்கல், வருடப் பிறப்புப் பொங்கல் என்பன சூரிய வழிபாட்டுக்குரியன. பசு மாட்டில் சகல தேவர்களும் வாசஞ் செய்வதால் மாட்டுப் பொங்கல் விசேடமாகின்றது. சித்திரைக் கஞ்சியில் அன்னத்தின் பங்கு பாற் கஞ்சியாக நைவேதனமாகின்றது.

ஐப்பசி மாதத்தில் பெளர்ணமி சிறப்பான வழிபாட்டு நாள். அன்று பெளர்ணமியும் அஸ்வினி நட்சத்திரமும் கூடிவரின் மிக்க விசேடம். அதேபோல ஐப்பசி அஸ்வினி நட்சத்திரமும் விசேடமானதே. இந் நன்னாளில் “சால்யன்னம்” எனப்படும் உயர்ந்த ரக அரிசியில் சாதம் சமைத்து விசேஷ அபிஷேகத்தின் போது அன்னாபி ஷேகஞ் செய்து பின்னர் அன்னக்காப்பு சிவலிங்கத்துக்கும் அம்பாளுக்கும் சாத்த வேண்டும். பூசையின் போது சாதகம் கறிவகைகள் பச்சடி குழம்பு என்பனவற்றைத் தலைவாழை இலையில் இட்டு நைவேதிக்கப்படுவது அதி விசேஷ பூஜை ஆகும்.

அன்னம் சிவஸ்வரூபம் எனக் கூறப்பட்டுள்ளது. “அன்ன ரூபம் விசேஷேன மம ரூபம் இதிஸ்ப்ருதம்” என்பது சிவ வடிவான அன்னம் மிகச் சிறப்பானது என்பதாம். அன்னக் காப்புச் சாத்தப்பட்ட சிவலிங்கத்தின் அருகில் அன்னத்தினாலான சிவலிங்கத்தையும் வைத்துப் பூஜிப்பதே முறை.

ஐப்பசி மாதப் பூரணையில் இவ்வாறு அன்னக் காப்பிட்டுப் பூசை செய்த பின்னர் சிவாலயம் வழமைக்கு மாறாக இத்தினத்தில் மாலை 3 மணி வரை சிவனடியார் தரிசனத்திற்குத் திறந்திருப்பதும் ஓர் அன்ன விசேஷமே. ஏனைய நாட்களில் உச்சிக் காலத்துடன் சிவாலயம் மூடப்படுவது வழமை.

இவ்வாறான சிவனருட் காட்சியினை நாம் கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரத்திலும் ஏனைய சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். சிவ தரிசனம் கோடி புண்ணியம். அதிலும் ஐப்பசிப் பெளர்ணமி அன் னக்காப்புச் சிவதரிசனம் அதிமேலானது. எனவே ஐப்பசிப் பெளர்ணமியில் சிவாலயஞ் சென்று சிவ தரிசனஞ் செய்து சிவன், அம்பாள் அருளைப் பெறுவோம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»