வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010


பல்கலைக்கழகங்களில் வன்முறைக் கலாசாரம்

பல்கலைக்கழகங்களில் வன்முறைக் கலாசாரம்

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் வன்முறைக் கலாசாரம் கட்டு மீறிச் சென்றுள்ளமைக்கு ருஹுணு பல்கலைக்கழக உபவேந் தர் தாக்கப்பட்டமை ஒரு உதாரணமாகும். பேராதனை பல்க லைக்கழகத்திலும் சமீபத்தில் மாணவர் தரப்பினால் ஏற்படுத்தப்ப ட்ட அமைதியின்மை நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

மாணவர் கள் தங்களது கல்வியையும் எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள் ளக்கூடிய அளவுக்கு பாரதூரமான காரியங்கள் இடம்பெற்றிருக்கி ன்றன. பல்கலைக்கழகக் கல்வி முற்றாகவே தடைப்படுகின்ற துர திர்ஷ்டமொன்று நேரும் பட்சத்திலேயே மாணவர்களின் தவறுகள் எத்தனை விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதும் தெரியவரும்.

ஒரு மாணவனின் பல்கலைக்கழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுவதென் பது சாதாரணமானதொரு விடயமல்ல. அவனது எதிர்காலக் கல்வி யுடன் வாழ்வும் பாழடிக்கப்படுகிறது. பெற்றோரின் கனவுகளும் பாழாகிப் போகின்றன. இத்தனை காலம் வரையான கடின உழைப் பானது கணநேர செயல் காரணமாக பாழாகிப் போவதென்பது தாங்க முடியாத வேதனை தருவதாகும்.

எனவே, பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிப்பதற்கு ஒரு மாணவன் எந் தளவு அறிவுத் திறனைப் பிரயோகிக்கின்றானோ அதனைவிட விவே கத்தை பல்கலைக்கழகக் கல்வி முடிவுறும் காலப் பகுதி வரை கடைப்பிடிப்பது இங்கு மிகவும் அவசியமாகிறது. ஒழுக்க விழுமி யங்களை உள்ளடக்கியதே கல்வியாகும். ஒழுக்கவிழுமியங்கள் அகன்று போனதும் கல்வியென்பதே அங்கு கேள்விக்குறியாகிப் போகின்றது. மாணவன் ஒருவன் பொறுமை, நிதானம் ஆகியவற் றைப் பேணுவது எந்தளவு அவசியமென்பது இங்கே புலனாகின் றது.

எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கடந்த காலங்களில் மாண வர் தரப்பினால் புரியப்பட்ட வன்முறைகள் நாம் அறியாதவைய ல்ல... மாணவர் பலருக்கு மரணத்தை ஏற்படுத்தும்படியாக தாக்கு தல்களும் பகிடிவதைகளும் இடம்பெற்றிருப்பதை நாமறிவோம். பல் கலைக்கழக உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் எண்ணி லடங்காதவை ஆகும்.

கலகக்காரர்கள் வீதிகளில் மோதிக் கொள்வ தைப் போல பல்கலைக்கழக மாணவர்கள் அடிதடியிலும் கல்வீச்சி லும் ஈடுபட்ட காட்சிகள் பலவற்றை தொலைக்காட்சிகள் வாயிலாக எமது நாடே நேரில் கண்டு மலைத்து நின்றதைக் கண்டிருக்கி றோம். இது போன்ற செயல்களை நாகரிக சமுதாயம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது சொல்லித் தெரிய வேண் டியதில்லை. ஆனாலும் பல்கலைக்கழக வன்முறைகள் தொடரவே செய்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைக ளில் சிலவற்றில் நியாயத்தன்மை இருக்கக் கூடும். அம்மாணவர் களின் சில கோரிக்கைகளை உயர்கல்வி அமைச்சும் ஏற்றுக் கொண் டிருப்பதை நாமறிவோம். கோரிக்கைகள் வேண்டுகோளாகும் போது அவை தீர்க்கப்படுவதற்கான சாத்தியங்களும் பிறக்கின்றன.

கோரிக்கைகள் வன்முறை வடிவத்தில் முன்வைக்கப்படும் போது அக்கோரிக்கைகளின் நியாயத்தன்மையில் சந்தேகம் எழுவதும் தவிர்க்க முடியாததாகிறது. இதனாலேயே பல்கலைக்கழக மாணவர் களின் போராட்டங்கள் யாவும் மக்களால் வன்முறைக் காட்சிக ளாக நோக்கப்படும் துரதிஷ்ட நிலைமை இன்று காணப்படுகிறது.

மக்கள் மத்தியிலுள்ள இத்தகைய அபிப்பிராயத்தை மாற்றும் விதத்தில் மாணவர்களின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் அமைவதே ஆரோ க்கியமானதாகும். இல்லையேல் பல்கலைக்கழக மாணவ சமுதாய த்தை ஒட்டுமொத்த மக்களே அச்சத்துடனும் அதிருப்தியுடனும் நோக் குகின்ற நிலைமை தவிர்க்க முடியாததாகி விடலாம்.

பல்கலைக்கழகங்களில் வன்முறை செயல்களில் ஈடுபடுவோரில் பெரு ம்பாலானோர் கலைப்பீட மாணவர்களென்பது பொதுவான அபிப் பிராயம். இவ்விடயமானது ஆய்வுக்குரியதாகிறது.

பல்கலைக்கழக த்தினுள் பிரவேசிப்பதற்கு கலைத்துறையானது இலகுவானதொரு மார்க்கமாகக் காணப்படுவதாக நிலவும் கருத்தில் உண்மை இருக்க லாம். அவ்வாறாயின் பல்கலைக்கழகக் கல்வியின் கீர்த்தியைப் பேணும்படியாக உயர்கல்வி முறைமைகளில் மாற்றங்களை ஏற்படு த்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது கல்வியியலாளர்க ளின் பொறுப்பாகிறது.

இவ்விடயத்தை கல்விசார் சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, பல்கலைக்கழகங்களினுள் அமைதியானதும் சுமுகமானதுமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்பதே கல்வியில் அக்கறை யுள்ள மாணவர்களினதும் பெற்றோரினதும் கோரிக்கை ஆகும்.

எதிர்காலக் கனவுகளைச் சுமந்தப்படி கிராமப்புறங்களிலிருந்து வறிய மாணவர்கள் ஏராளமானோர் பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்கி ன்றனர். இவர்களின் பெற்றோர் கொண்டுள்ள நெஞ்சுரம் பெரிது. வறிய நிலையிலும் கல்வியைப் பெரிதாக நினைக்கும் அந்த அப் பாவிப் பெற்றோரின் கனவுகள் வெறும் கண்ணீராகி விடலாகாது. வன்முறையில் ஈடுபடும் மாணவ தரப்பினரும் இது குறித்து மனி தாபிமானத்துடன் சிந்திப்பது இங்கு அவசியம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.