வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

நோபல் பரிசு பெற்ற பேராசிரியரை சீனா விடுவிக்க வேண்டும்

நோபல் பரிசு பெற்ற பேராசிரியரை சீனா விடுவிக்க வேண்டும்

அமெரிக்கா வலியுறுத்தல்

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த லியு ஜியாபோவை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமெரிக்க நீதியரசர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஜனநாயகம் கோரி போராடி வருபவர் லியு ஜியாபோ (54) முன்னாள் பேராசிரியரான இவர், சீனாவில் பல கட்சி தேர்தல் முறையை வற்புறுத்தி போராட்டம் நடத்தினார்.

தேசவிரோத நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு இவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மனித உரிமைக்காக போராடிய இவரது சேவையைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரை விடுவிக்கும் படி இவரது மனைவி கோரினார். இதனால் இவரது மனைவியும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க நீதியரசர் எரிக் ஹோல்டர் இரண்டு நாள் பயணமாக இன்று சீனா வருகிறார்.

ஹாங்காங்கில் அவர் இது குறித்து குறிப்பிடுகையில், “நோபல் பரிசு பெற்ற லியு ஜியாபோவை விடுதலை செய்ய வேண்டும்.

சீன தலைவர்களை சந்தித்து இந்த கருத்தை வற்புறுத்துவேன்” என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»