வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010


‘அற்றையத் திங்களில்’ பேராசிரியர் சந்திரசேகரன்

‘அற்றையத் திங்களில்’ பேராசிரியர் சந்திரசேகரன்

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்வியாளர்களில் பல்வேறு பரிமாணங்களில் கல்வி பணியாற்றி வருபவர்தான் பேராசிரியர் சோ. சந்திரசேகரன். இவருடைய கல்வித் துறை பணிகளும் ஏனைய பணிகளும் தமிழ் பேசும் சமூகத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகிறது.

இலங்கை இந்தியர் வரலாறு எனும் நூல் மிக முக்கியமானது ‘கல்வியுலகில் நல்ல பல மாற்றங்களை கொண்டுவர ஒவ்வொரு கல்வியாளனும் சிறந்த ஆய்வாளனாக இருக்க வேண்டும்’ என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாகும்.

பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் பதுளை ஊவாக் கல்லூரி உருவாக்கிய சிறந்த கல்விமானாகும்.

சிறந்த கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட தெல்லிப்பளை மாகாஜனக் கல்லுரியில் இடைநிலை கல்வியை கற்று பின்னர் பேராதனை பல்கலைக்கழகம்.

ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகம் மற்றும் ஒசாகா பல்கலைக்கழகம் போன்றவற்றில் உயர்கல்வியை மேற்கொண்ட பேராசிரியர் நாற்பது ஆண்டுகால கல்விச் சேவையின் பின் கடந்த மாதம் ஓய்வு பெற்றுள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்பு வகித்த பேராசிரியர் சோ.

சந்திரசேரகம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தனது வாழ்வியல் அனுபவங்களை கொழும்புத் தமிழ்ச் சங்க அக்டோபர் மாத ‘அற்றையத்திங்கள்’ நிகழ்வில் பகிர்ந்துகொள்ள உள்ளார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»