வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

செலவினங்களை குறைக்கும் பிரிட்டன்; 130 பில். டொலர் சேமிக்கத் திட்டம்

செலவினங்களை குறைக்கும் பிரிட்டன்; 130 பில். டொலர் சேமிக்கத் திட்டம்

பிரிட்டனில் இந்த ஆண்டின் மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டேமாக்ரடிக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த பொதுச் செலவின வெட்டுகளை அறிவித்துள்ளது.

பல மாதங்களாக நடைபெற்ற ஒட்டுமொத்த செலவின மீளாய்வு நட வடிக்கைக்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் பிரிட்டன் எத்தகையளவில் செலவினங்களை குறைக்கும் என்பதை நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் அறிவித்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 130 பில்லியன் டொலர்களை சேமிக்க அரசு எண்ணுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டன் எடுத்துள்ள மிகப் பெரும் சிக்கன நடவடிக்கை இது வெனவும் தான் எடுக்கும் நடவடிக்கைகள் கடினமானவை எனவும் நிதி அமைச்சர் ஆஸ்போர்ன் நாடாளுமன்றத்தில் ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த செலவின வெட்டுக்களால் பொதுத் துறையில் 5 இலட்சம் பேர் வேலையிழப் பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

நலவாழ்வுச் செலவுகளில் 7 பில்லியன் டொலர்கள் குறைக்கப்படுகின்றன. வேலையில்லாதோர், உடல் ஊனமுற்றோர், நோயாளர் போன்றோர் பெறும் அரச உதவிகளுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவு ள்ளது.

அரசின் பல துறைகளின் செலவுகளும் குறைக்கப்படுகின்றன. சராசரியாக ஒவ் வொரு துறையின் செலவுகளும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

காவல்துறை, உள்ளூராட்சி அமைப்புக்கள் போன்றவற்றின் செலவுகளும் அதே நேரத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சர்வதேச உதவிகள் போன்றவற் றுக்கான செலவுகளும் வெட்டப்படாது என்றும் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெளிவுபடுத்தினார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»