வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

பாக். தேர்தல் வன்முறையை கண்டித்துக் கடையடைப்பு

பாக். தேர்தல் வன்முறையை கண்டித்துக் கடையடைப்பு

பாகிஸ்தானில் கராச்சி நகரில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் 56 பேர் பலியானதைக் கண்டித்து, அங்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் ஓராங்கி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முட்டாஹிதா குவாமி இயக்க எம். எல். ஏ. ராஜா ஹைதர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள், முட்டா ஹிதா குவாமி கட்சியை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இன்னும் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் கருதப்படுகின்றனர். இதே தொகுதியில் பஸ்தூன் பழங்குடி மக்களும் அதிகம் உள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அவாமி லீக் கட்சியும் இத்தொகுதியில் போட்டியில் குதித்தன. ஆனால், திடீரென அவாமி லீக் கட்சி போட்டியிலிருந்து விலகியது.

பஸ்தூன் பழங்குடி ஆதரவு பெற்ற இந்த கட்சி போட்டியிலிருந்து வாபஸ் பெற்ற தால் கலவரம் வெடித்தது. கடந்த வாரம் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது துவங்கிய வன்முறை மூன்று நாட்களாக தொடர்ந்தது. இந்த கலவரத்தில் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலிருந்து சென்று அங்கு குடியேறிய முஸ்லிம்கள்தான் இந்த சம்பவத்தில் அதிகம் பலியாகியுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுப்படுத்த தவறிய அரசை கண்டித்து நேற்று கராச்சி முழு வதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»