வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

பாகிஸ்தான் அணியில் இருந்து யூசுப் காயம் காரணமாக விலகல்

தென்னாபிரிக்காவுடனான போட்டி;

பாகிஸ்தான் அணியில் இருந்து
யூசுப் காயம் காரணமாக விலகல்

யூனுஸ் கானுக்கு மீண்டும் வாய்ப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட்டுடனான பேச்சுவார்த்தை வெற்றி அளித்ததாக பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் யூனுஸ்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் போட்டித்தடைக்கு உள்ளாகி பின்னர் அதிலிருந்து விடுதலை பெற்ற யூனுஸ்கானுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யூனிஸ்கான், பாக். கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட்டை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சவார்த்தையின் மூலம் இருவருக்கும் இடையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக யூனுஸ்கான் தெரிவித்துள்ளார்.

எனவே தாம் விரைவில் பாக்.அணிக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பி ட்டார்.

அடுத்து பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தென்னாபிரிக்க அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான பாக். அணியில் இணைக் கப்பட்டுள்ள மொஹம்மட் யூசுப் காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

இந்நிலையில் மொஹம்மட் யூசுப்பிற்கு பதில் தென்னாபிரிக்காவுடனான தொடருக்கு யூனுஸ்கானை இனைக்க பாக். தேர்வுக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »