வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

கண்டியில் உதைபந்தாட்டம்

கண்டியில் உதைபந்தாட்டம்

கண்டி உதைபந்தாட்ட சங்கம் சார்பாக கெனடி விளையாட்டு கழகம் மூலம் நாடாத்தப்பட்ட 17 வயதுக்கு கீழ்பட்ட மற்றும் 19 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் இறுதி போட்டிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. 17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான இறுதி போடியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியும் கலகெதர அல்ஜபார் வித்தியாலயமும் மோதவுள்ளன.

19 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான போட்டியில் புனித சில்வெஸ்டர் கல்லூரியும் தர்மராஜா கல்லூரியும் மோதவுள்ளன. (அ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »