வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

உதைபந்தாட்டப் போட்டி; காலி றிச்மன்ட் கல்லூரி சம்பியன்

உதைபந்தாட்டப் போட்டி; காலி றிச்மன்ட் கல்லூரி சம்பியன்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் இலங்கை பாடசாலைகள் சம்மேளனத்துடன் இணைந்து 15 வயதுப் பிரிவின் கீழ் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் காலி றிச்மண்ட் கல்லூரி இவ்வருடத்திற்கான சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

திருகோணமலை மெக்கெய்ஷர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோட்டை ஹேவவிதாரண கல்லூரியை 4-3 என்ற கோல் கணக்கில் காலி றிச்மண்ட் கல்லூரி வெற்றிபெற்றது.

21 பாடசாலைகளின் அணிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் (சுழற்சி) முறையில் முதல் சுற்றில் பங்கு கொண்டன. இரண்டாம் சுற்று விலக்கல் முறையில் நடத்தப்பட்டது.

இதன் போது இறுதிப் போட்டிக்கு தெரிவான இரு அணிகளும் ஆட்டநேரத்தின் போது எதுவித கோல்களையும் பெறவில்லை.

வெற்றியைத் தீர்மானிக்க தண்டனை உதை வழங்கப்பட்டது. இதில் காலி றிச்மண்ட் வெற்றி பெற்றது. (அ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »