வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

சதுரங்கப் போட்டி: முடிவுகள் வெளியீடு

சதுரங்கப் போட்டி: முடிவுகள் வெளியீடு

கல்முனை வலய மட்ட ஆரம்பப் பிரிவு சதுரங்க போட்டி முடிவுகள் தற்போது வலயக் கல்விப் பணிப் பாளர் எம்.ரீ.ஏ. தெளபீக், பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆர். சுகிர் தராஜன் ஆகியோரால் ஒப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தரவரிசை 1, 2, 3 ஆகியவற்றை முறையே கமு/அல் மனார் மத்திய கல்லூரி, கமு/அல் ஹிலால் வித்தியாலயம், கமு/அல் அஷ்ரக் தேசிய பாட சாலை பெற்றுக்கொண்டுள்ளதாக உடற் கல்வி பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் அப்துல் சத்தார் தெரி வித்தார்.

இதேவேளை தரவரிசை ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இடங்களை கமு/அல் மிஸ்பா வித்தியாலயம், கமு/உவெஸ்லி உயர்தரக் கல்லூரி, கமு/சரஸ்வதி வித்தியாலயம் (பெரிய நீலாவணை) கமு/அல் ஜலால் வித்தியாலயம் பெற்றுக் கொண்டதாக மேலும் தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில், சான்றிதழ், கிண்ணம், ஆகியவற்றை உவெஸ்லி கல்லூரி அதிபர் வீ. பிரபாகரன் வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

(அ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »