வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

கடும் நடவடிக்கையில் இறங்குவோம்;;;

ஏவுகணை சோதனை:

கடும் நடவடிக்கையில் இறங்குவோம்;;; வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஐ. நா. மற்றும் அமெரிக்கா எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தனது நாட்டில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கப்பல்கள் செல்ல 9 நாட்கள் தடை விதித்து உள்ளது.

அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனை நடத்தும் போதுதான் வடகொரியா இப்படி நடத்துவது வழக்கம். இப்போது தனது ‘பயான் கயாங்’ ஏவுகணையின் புதிய ரகத்தைச் சோதனை செய்து பார்க்க வடகொரியா திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா வெளியுறவு செய்தி தொடர்பாளர் பிலிப் குரோஸி கூறும்போது, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது அந்த பகுதியில் பதற்றத்தை உருவாக்குகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்.

இதையும் மீறி சோதனை நடத்தினால் கடும் நடவடிக்கையை எடுக்க நேரிடும். எனவே ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும்.

அண்டை நாடுகளுடன் வடகொரியா உறவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் இது போன்ற செயல்கள் அதை பாதிக்கும் என்றார்.

வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரிகளாக உள்ளன. சமீபத்தில் தென்கொரிய போர் கப்பல் ஒன்று மர்மமான முறையில் கடலில் மூழ்கியது. இதற்கு கப்பலை வடகொரியா தான் ஏவுகணை தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக தென்கொரியா புகார் கூறியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இப்போது ஏவுகணை சோதனை நடத்துவதால் பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •