வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

இணையதளத்தில் கருத்துகளை வெளியிட சீன இராணுவ வீரர்களுக்குத் தடை விதிப்பு

இணையதளத்தில் கருத்துகளை வெளியிட சீன இராணுவ வீரர்களுக்குத் தடை விதிப்பு

இணையதளத்தில் தமக்கென்று பிரத்தியேகமான பக்கத்தை உருவாக்கி அதில் சுதந்திரமாகத் தகவல்களை பரிமாறிக்கொள்ள சீன இராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு இராணுவம் கடந்த 15ம் திகதி இந்தத் தடையை விதித்தது. இராணுவ வீரர்கள் இணையத்தளத்தில் சுதந்திரமாக தகவல்களை பரிமாறிக்கொள்வதால் சிக்கல் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடுகிறது.

ஆகையால் இதுபோன்ற அபாயகரமான சூழலை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது நாட்டு வீரர்களுக்கு சீனா இப்படியொரு தடை விதித்துள்ளது.

இராணுவ வீரர்கள் இணையதளத்தில் பிரத்தியேக பக்கங்களை உருவாக்கி அதில் தகவல் பரிமாறிக்கொள்ளும் போது அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் மூலம் சில நேரங்களில் இராணுவ ரகசியங்களும் கசிவதற்கு வாய்ப்புள்ளது.

இதனைத் தடுக்கும் பொருட்டே இராணுவம் தடை விதித்துள்ளது. இத் தடையை வீரர்கள் மதித்து நடக்க வேண்டும். இதை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன இராணுவத்தில் இணையதளத்தை பயன்படுத்தும் வீரர்கள் அதிகம் உள்ளனர். பணி நேரம் தவிர்த்து இணையதளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் வீரர்களும் உண்டு.

இதுபோன்ற வீரர்களுக்கு இராணுவத்தின் இந்த அதிரடித் தடை உத்தரவு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்களது அதிருப்தியை துணிந்து வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •