வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

காட்சிப்படுத்தல் மூலம் கற்பித்தல் முறை


வடக்கில் ஆஸ்பத்திரிகள் அபிவிருத்தி

(28.06.2010 2.15PM)

வடக்கில் ஆஸ்பத்திரிகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அவற்றின் வைத்திய மற்றும் தாதிமார் குறைபாட்டை நீக்க மாகாண ஆளுனர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி வடமாகாண நிர்வாகத்தின் கீழ்வரும் ஆஸ்பத்திரிகளில் 250 வைத்தியர்களும் 250 தாதிமாரும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.ஜுலை மாதத்தில் வைத்தியர்களுக்கான நியமனங்களும், ஆகஸ்ட்டில் தாதியருக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில்

(24.06.2010 10.40AM)

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெறும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். ஜுலை மாதம் 14ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து மாவட்ட மட்டங்களில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் காயம்.

(24.06.2010 10.40AM)

இன்று காலை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டு வீச்சுக்குக் காரணம் தனிப்பட்ட பகையே என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் சிறு காயங்களுக்குள்ளானர்.

கொழும்பு மாநகரசபை கலைப்பு

(22.06.2010 2.15PM)


கொழும்பு மாநகரசபை நாளைமுதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முதல் அமைச்சர் இந்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளார். .ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு திருவிழா நாளை ஆரம்பம்

 (22.06.2010 11.50AM)

வருடாந்த மடுமாதா உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இம்முறை மடுமாதா உற்சவத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் முழுமையான அமைதி திரும்பியுள்ள நிலையில் பெருந்திரளான பக்தர்கள் இம்முறை மடு திருவிழாவில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பக்தர்களின் நன்மைகருதி சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



 

குருநாகலில் அதிகாலை லொறி - வான் விபத்து; ஏழு பேர் மரணம்

குருநாகலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்துடன், பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.குருநாகல் - தம்புள்ள பிரதான வீதியில் சென்றுக் கொண்டிருந்த வானுடன் லொறி நேருக்கு நேர் மோதியதிலேயே நேற்று அதிகாலை 2.10 மணியளில் தெதுறுஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவரம் »
 

வன்னியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருத்தியமைக்கப்பட்ட பின்னர் உரிமையாளர்களிடம் நேற்று முன்தினம் கையளிக் கப்பட்டது. கிளிநொச்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மோட்டார் சைக்கிள் ஒன்றை கையளிப்பதையும் முருகேசு சந்திரகுமார் எம்.பி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

 

மன்னாரில் மீளக்குடியேறுவோரில்

இருப்பிடம் அற்றோருக்கு
அரசாங்கத்தினால் காணிகள்

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் காணிகள் அற்றவர்களுக்கு அரச காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

விவரம் »
 

கட்டுநாயக்க - போபால் நேரடி விமான சேவையினால் சாஞ்சி புனித தலத்துக்கு இலகுவில் செல்ல வாய்ப்பு

இந்தியாவின் போபால் பிராந்திய விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இலங்கையர்கள் நேரடியாக போபால் சென்றடைய முடியுமென இங்கு வந்திருக்கும் இந்தியாவின் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.

விவரம் »