வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

ரூ. 1,250க்கு பெற்ற குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி

ரூ. 1,250க்கு பெற்ற குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி

வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடுத்த வேளைக்கு சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காத பெண்கள் குழந்தைகளை விற்பது வாடிக்கை தான். ஆனால் செல்வச் செழிப்பு மிக்க அமெரிர்காவில் ஒரு தம்பதி வெறும் 1,250 ரூபாய்க்கு தாங்கள் பெற்ற குழந்தையை விற்க முயன்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து உள்ளது.

அந்த நகரை சேர்ந்தவர் பேட்ரிக் பவுசக், 38 வயதான இவரது மனைவி சமந்தா டொமாசினி, அவரது வயது 20. இவர்கள் இருவ ரும் ஒரு சூப்பர் மார்க் கெட்டுக்கு வெளியே நின்றபடி தங்கள் குழந்தையை விற்க முயன்றனர்.

கடையில் இருந்து வெளியே வந்த 2 பெண்களிடம் தங்களின் 6 மாத குழந்தையை காட்டி இதை ரூ. 1,250 கொடுத்து வாங்கிக்கொள் கிaர்களா என்று கேட்டார்கள். பவுசக் வேடிக்கைக்காக இப்படி கூறுகிறார் என்று நினைத்து அவர்கள் சிரித்தபோது விளை யாட்டு இல்லை.

நிஜமாகவே விலைக்கு விற்க இருக்கிறோம் என்று அவர்கள் சொன்னபோது, அந்த 2 பெண்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று கூறி விட்டு நகர்ந்தபோதிலும் அவர்கள் இதை பார்த்து சும்மா இருந்து விட வில்லை. பொலிஸ¤க்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸார் அவர்களை கைது செய்தனர். அதோடு அவர்களது வீட் டிலும் சோதனை போட்டனர். அப் போது தான் அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்து உள்ளது.

வீட்டில் எந்த பொருளும் இல்லாமல், இருந்த பொருள்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தன.

அந்த பெண் போதையில் இருந் தபடியே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப் பதையும் வழக்கமாக செய்து வந்து இருக்கிறார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •