வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

பேச்சுவார்த்தை நடந்த மேசையில் தலைகீழாக இருந்த இந்திய தேசியக்கொடி

பேச்சுவார்த்தை நடந்த மேசையில் தலைகீழாக இருந்த இந்திய தேசியக்கொடி

இந்தியா - பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மேசையில் வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடி தலைகீழாக இருந்தது. பின்னர் பேட்டி அளித்த ப. சிதம்பரத்திடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ப. சிதம்பரம் ‘அந்த தவறை கவனித்ததும் உடனடியாக சரிசெய்யும்படி கேட்டுக்கொண்டேன். அதுபற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்த மலிக் உடனே கொடியை சரிசெய்ததாக’ தெரிவித்தார். ‘தேசியக்கொடி தவறாக இருந்ததை தொலைக்காட்சிகளில் காண்பித்தவர்கள் தவறு சரி செய்யப் பட்டதையும் காண்பிக்க வேண்டும்’ என்றும் ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •