வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

‘தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் யுத்த வெற்றிக்கு வழிவகுத்தது’

‘தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் யுத்த வெற்றிக்கு வழிவகுத்தது’

பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ

தகவல், தொழில்நுட்பத்தின் பங்களிப்பும் யுத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தையும், ஆளில்லா விமானத்தையும் பயன்படுத்தியதன் மூலம் சிவிலியன்களின் எந்தவித உயிர்ச் சேதங்களும் இன்றி மனிதாபிமானத்தின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டுவர முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவ தற்காக தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்ற தொனிப்பொருளில் மைக்ரோவொப்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வைபவம் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரை யாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான தலைமைத்துவத்தை முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கியதுடன் சகலருக்கும் ஒரே இலக்கை வழங்கினார். இதற்கு மேலதிகமாக நவீன ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம், நவீன உத்திகள் பயன்படுத்தப்பட்டன. இதே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலிக ளின் ஆதரவாளர்களும், புலிகள் சார்பு ஊடகங்களும் படை நடவடிக்கைக ளுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை செய்து சர்வதேசத்தின் அழுத்தத்தை எம்மீது புகுத்த முயன்றனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •