வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

இடைத்தங்கல் முகாம்களாக இருந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை

இடைத்தங்கல் முகாம்களாக இருந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை

வவுனியாவில் இடைத் தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வந்த 17 பாடசாலைகளில் நேற்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனேகமானோர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதை அடுத்து இந்த 17 பாடசாலைகளும் மீண்டும் கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஓமந்தை பகுதியிலுள்ள ஒரு பாட சாலை மாத்திரமே படை நடவடிக் கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிரா மங்களில் தங்கியிருந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைக்கு நேற் றைய தினம் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (ஜ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •