வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

ஊழியர் விடுமுறை: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

ஊழியர் விடுமுறை: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி குறிப்பிட்ட அலுவலகம் ஒன்றில் ‘அரச, தனியார்’ பணிபுரிபவர் வாக்களிப்பதற்கு ஏதுவாக தான் சார்ந்த அலுவலக அதிகாரிக்கு விடுமுறைக்காக விண்ணப்பிக்க வேண்டும். தூரத்தைக் கருத்தில் கொண்டு நான்கு மணித்தியாலங்களுக்குக் குறையாத விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

வழங்கப்படும் விடுமுறையானது சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகக் கருதப்பட வேண்டும். அதேநேரம் ஊழியர்களின் சாதாரண விடுமுறைகளிலிருந்து புறம்பானதாக இருக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை காலத்தை அந்த ஊழியர் தொழில் புரியும் இடத்திலிருந்து அவரது வாக்கெடுப்பு நிலையத்திற்கு போகவும் அங்கிருந்து திரும்பி வரவும் உள்ள தூரத்தை கருத்திற்கொண்டு தொழில் தருநரால் தீர்மானம் செய்தல் வேண்டும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •