புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
வாழையூருக்கு பதில் கவிதை

வாழையூருக்கு பதில் கவிதை

இலக்கிய உலகில் இமயம் நீ
நானோ ஒரு சிறு கூழாங்கல்
நினைத்ததை கவிபுனையும்
உனது ஆற்றல் - எனது
இலக்கியப் புலமைக்குச்
சாவுமணி

காவியத்தில் இடம்பிடித்த
கவிதைகள் உன் கடைக்கண்
பார்வைக்கும் பெறா - நீ
ஏறெடுத்துப் பார்க்காத காதல்
கடைசியில் கல்லறைக்கே
இரையாகின்றது.

உனது கவிதைக்குமுன் - என்
போலி இலக்கிய கிரீடம்
கழற்றப்பட்டு முகத்திரை
கிழிக்கப்படுகிறது

காதலுலகில்
உனக்குத் தனியிடம்
கவியுகத்திலோ நீ முதலிடம்
மீதமுள்ள உன் திறமைகளோ
தனிரகம்.

நீ நடந்து வந்தால் நந்தவனம்
விலகிச் சென்றால் சுட்டெரிக்கும்
பாலை வனம். மொத்தத்தில்
உன்னிடம் நான் சரண் - உனது
தயவோ எனது அரண்.


விதி

ஆண்டு நிறைவு
அழுத்துப் பட்டு
தொங்குது
பழைய கலண்டர்


கொலை

வீதி மேடையில்
ஒரு
கற்பழிப்பு நாடகம்
விபத்து


உறவு

உரிமையான
உறவானாலும்
ஊரார் போற்றி
உயிர் பெற்றாலும்
இது பணம் இருக்கும் வரை
பதட்டம் இல்லாமல்
காயத்தில்
ஒட்டியிருக்கும் பஞ்சு


ஏன்?

நாட்டி ஆண்டுகள்
பல கடந்தும்
முளைக்கவில்லை
இன்னும் அடிக்கல்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.