வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

பாக். அரசை கவிழ்க்கும் அல்கொய்தா முயற்சிக்கு இடமளியோம்

கிளர்ச்சியில் ஈடுபட்ட
11 பேருக்கு ஈரானில் தூக்கு

ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அங்கு சுன்னி முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பகுதியில் வசிக்கும் சுன்னி முஸ்லிம்களான பலுச் இன மக்களின் உரிமைகளுக்காக ஜூண்டோலா என்ற அமைப்பு ஆயுதம் தாங்கி போராடி வருகிறது.

இந்த குழுவினர் கடந்த 15ஆம் திகதி சபாகர் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் பள்ளிகளுக்கு தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் 39 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் ஜகெதான் சிறையில் கடந்த திங்கட்கிழமை தூக்கில் போடப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய சிலர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்து ஈரானிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை ஈரான் ஜனாதிபதி அஹமதிநஜாத் கேட்டுக்கொண்டார். அவர் தொலைபேசியில் சர்தாரியுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»