வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

பாக். அரசை கவிழ்க்கும் அல்கொய்தா முயற்சிக்கு இடமளியோம்

பாக். அரசை கவிழ்க்கும்
அல்கொய்தா முயற்சிக்கு இடமளியோம்

அமெரிக்க துணை ஜனாதிபதி

பாகிஸ்தானில் சர்தாரி தல¨மையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு அல்-கொய்தா இயக்கம் முயற்சி செய்து வருகிறது என்றும், இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பைடன் குற்றஞ் சாட்டினார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில் அவர் கூயியதாவது:

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவம் தங்கி இருப்பதற்கு காரணம் அல்-கொய்தா இயக்கத்தை பூண்டோடு அழிப்பதற்காகத்தான். அதை தோற்கடித்தால் தான் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும். அது ஏற்பட்டால் தான் அல்-கொய்தா வலுப்பெற முடியாது. அது ஆப்கானிஸ்தானில் வலுவாக கால் ஊன்றி விட்டால் அங்கு இருந்து கொண்டு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும்.

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அல்-கொய்தா இயக்கத்தினர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபடி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அல்-கொய்தாவினர் அந்த நாட்டில் தங்கி இருந்து கொண்டு சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.

பாகிஸ்தான் அணு ஆயுத நாடு அகும். இங்கு ஆட்சியை கவிழ்த்துவிட்டு அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்தினால் அணு ஆயுதம் அவர்களின் கைகளுக்கு போய்விடும் ஆபத்தை தவிர்க்க முடியாது.

எனவே தான் அல்-கொய்தாவை தோற்கடிப்பதில் உறுதியாக இருந்து வருகிறோம். தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகளில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.

அல்-கொய்தா தலைமை இப்போது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி உள்ளது. நியூயோர்க் நகரில் இரட்டை கோபுரங்களை தகர்த்தது போன்ற தாக்குதல்களை இங்க இருந்து கொண்டு நடத்துவதற்கு அல்- கொய்தாவிடம் இப்போது திறன் கிடையாது என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் அவர்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர். சிறிய அளவிலான தாக்குதல் களுக்கான சான்றுகளை தான் டைம் சதுக்க கார் குண்டு தாக்குதல் முயற்சியின் போது பார்த்தோம்.

அல்-கொய்தா தலைமையை அமெரிக்க இராணுவம் விரட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த வகையில் அமெரிக்க இராணுவம் வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ள தீவிர வாதிகளின் சொர்க்கமாக உள்ள பகுதிகளை மூடுவதற்கான முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சியை அமைப்பதிலும் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு துணை ஜனாதிபதி ஜோபைடன் கூறினார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»