வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வு

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வு

சீனா நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண முடியும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் ஆரோக்கியமான பேச்சுவாரத்தையையும், ஆலோசனைகளையும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

சீனப் பிரதமர் வென்ஜியாபோவின் சமீபத்திய இந்திய பாகிஸ்தான் பயணம் குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியது; தெற்கு ஆசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமான நாடுகள் சீனாவுக்கு நெருங்கிய நட்பு நாடுகள் தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவை சீனாவுடன் அவ்விரு நாடுகள் கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தே அமைகின்றது.

இப்போதைய நிலையில் சீனா- இந்தியா, சீனா- பாகிஸ்தான் உறவு சிறப்பாக உள்ளது. இதை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் பிரதமர் வென்ஜியாயோ மேற்கொண்ட பயணம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. இருதரப்பும் பரஸ்பரம் பயன்பெறம் விதத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»