வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010


கைப்பணியாளர்கள் நாட்டின் நற்பெயரை வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்க வைக்கிறார்கள்

கைப்பணியாளர்கள் நாட்டின் நற்பெயரை
வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்க வைக்கிறார்கள்

இலங்கையின் நற்பெயரையும், புகழையும், கீர்த்தியையும் வெளிநாடுகளில் மீண்டும் நிலைநாட்டக் கூடியவர்க ளாக, எமது நாட்டின் கைப்பணியாளர்கள் திகழ்கிறார் கள். இலங்கைக்கு வரும் கோடீஸ்வர வெளிநாட்டு உல்லா சப் பிரயாணிகள் இங்கிருந்து விலை உயர்ந்த இரத்தினக் கற்களை வாங்கிச் செல்வார்கள்.

அவர்களை விட, குறைந் தளவிலான செல்வந்தர்கள் தங்கள் உற்றார் உறவினர்கள் நண் பர்களுக்கு பரிசளிப்பதற்கென பெரும்பாலும் சிறந்த வேலை ப்பாடுகள் அமைந்த கைப்பணிப்பொருட்களையும், பலகை யில் செதுக்கப்பட்ட அழகிய ராட்சத முகமூடிகளையும் எடு த்து செல்வார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை எண் ணக்கரு, கைப்பணியாளர்களின் நல்வாழ்வுக்காகவும், அவர் களின் வருமானத்தை பல மடங்கு பெருக்குவதற்காகவும், எமது நாட்டின் குடிசைக் கைத்தொழிலாகவும் சிறிய அடிப் படையிலான கைத்தொழில் முயற்சிகளாகவும் இருந்து வரும் கைப்பணி பொருட்களின் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கு வகை செய்துள்ளது.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து, மீண்டும் நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில், 2011ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட த்தில் கைப்பணி தொழில் துறையின மேம்பாட்டிற்காக அர சாங்கம் இப்போது பெருமளவு பணத்தை ஒதுக்கீடு செய்து இருக்கிறது என்று, பொருளாதார அபிவிருத்தி துறை அமை ச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள ஜனகலா கேந்திர நிலையத்தில் கைப்பணி விற்பனை கிராமத்தை ஆரம்பித்து வைத்து பேசிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எமது நாட்டின் கைப் பணி பொருட்களை தயாரிக்கும் கலைஞர்கள் எங்கள் நாட் டின் சார்பில், வெளிநாடுகளில் நல்லெண்ண தூதுவர்களாக விஜயங்களை மேற்கொண்டு, எமது கைத்தொழில் துறை யின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஏற்புடைய வகையில் தமது அமைச்சு அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடு க்கும் என்று உறுதியளித்தார்.

ஒரு நாட்டின் கலாசாரத்தையும், இந்நாட்டின் வரலாற்று சின்னங் களையும் பாரம்பரியத்தையும் உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டக் கூடிய வல்லமை பொருந்திய சக்தியாக கைப்பணிப் பொருட்கள் விளங்குகின்றன. அதனால் தான் இன்று உலக நாடுகளில் இலங்கையின் கைப்பணிப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இங்கு வரும் வெளி நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பாரிய சுப்பர் சந்தைகளில் இப்பொருட்களை வாங்குவதைவிட, அவை தயாரிக்கப்படும் கிராமங்களுக்கு நேரில் சென்று, வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

எனவே, அவர்களின் விருப்பத்திற்கு அமைய, கிராம மட் டத்தில் கைப்பணியாளர்கள் தங்கள் தொழிலை சிறப்புற செய் வது அவசியம் என்றும், அமைச்சர் வலியுறுத்தினார். இவ் விதம் கைப்பணி துறையின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இலங்கையின் ஆசியாவின் விந்தைக்குரிய ஒரு சிறந்த நாடாக மாற்றிவிடும் அரசாங்கத்தின் லட்சியக் கனவு நிறைவேறிவிடும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

பயங்கரவாத யுத்தத்தின் போது, இலங்கை மீது பாரிய அழுத் தங்களை மேற்கத்தைய வல்லரசுகள் கொண்டு வந்து, பிரச்சி னைகளை கொடுத்து வந்த போதிலும் இன்று, ஜனாதிபதி அவர்கள் தனது சிறந்த ஆளுமையின் மூலம் உலக நாடு களில் நற்புறவை வென்றெடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நல்வழியின் கீழ் எமது நாட்டின் கைப்பணியாளர்கள் தங்கள் படைப்புக்களையும், தங்கள் தொழில் திறமைகளையும் வெளி நாட்டவர்களுக்கு எடுத்துக் காட்டக் கூடிய வகையில் பணி புரிவது அவசியமாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய கைப்பணி மன்றத்தின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோர் எங்கள் நாட்டின் கைப்பணி பொருட்களின் தரத்தை உயர்த்துவதற்கு ஆற்றி வரும் மகத்தான சேவையை, இந்த வைபவத்தின் போது பஷில் ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட, இலங்கையின் சகல பகுதிகளையும் சேர்ந்த கைப்பணியாளர்களின் தயாரிப் புக்கள், இங்கு அமைக்கப்பட்டிருக்கும் 30 விற்பனை நிலை யங்களில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.