வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

அமெரிக்காவில் திவாலாகும் வங்கிகளின் ரகசியங்களை வெளியிடுவேன்

அமெரிக்காவில் திவாலாகும் வங்கிகளின்
ரகசியங்களை வெளியிடுவேன்

- அசேஞ்ச் மிரட்டல்

அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மிரட்டல் விடுத்துள்ளார்.

அசேஞ்ச் ஒரு உயர் தொழில்நுட்ப தீவிரவாதி என்று அமெரிக்க அரசு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுவிடன் பெண்கள் இருவரை வைத்து தமது செயல்பாட்டை முடக்க சதித்திட்டம் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமது பக்கம் நியாயம் இருப்பதால் தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள அசேஞ்ச் நீதிக்காக தொடர்ந்து போராடப்போவதாக தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை முடக்க நினைத்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்று அசேஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக அளவில் பல கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகள் பெரும்பாலானவை திவாலாகும் நிலையில் இருப்பதாக ஜூலியன் அசேஞ்ச் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»