வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010



இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம். (படம்: சுதத் சில்வா)
 



இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின் (369)

(ஆசை ஒழிந்தால் ஆனந்தம் ஊறிக் கொண்டேயிருக்கும்)



Advertisments





 

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்புக்கு
ஜப்பான் முதலீடு

பாராளுமன்ற பிரதிநிதிகள் நிலைமையை நேரில் ஆராய்வு

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யவுள்ளன.இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழலை எடுத்துரைத்து ஜப்பானிய கம்பனிகளின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதாக ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்தது.ஜப்பான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற ஒன்றியத்தின் சார்பில் இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே நேற்று (22) இதனைத்தெரிவித்தது.ஜப்பானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹிரோபியுமி ஹிரானோ தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட குழு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது.

விவரம் »
 

தொடர் கொள்ளைச் சம்பவங்களை
தடுக்க யாழில். கூட்டு ரோந்து

பொலிஸார் - இராணுவம் இணைந்து நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.இதேவேளை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமலும், பகலில் குறிப்பாகப் பெண்கள் தயக்கமின்றி நடமாட முடியாமலும் திண்டாடுகின்றார்கள்.

விவரம் »
 

 



மஹிந்த சிந்தனை எண்ணக்கரு, கைப்பணியாளர்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் வருமானத்தை பல மடங்கு பெருக்குவதற்காகவும், எமது நாட்டின் குடிசைக் கைத்தொழிலாகவும் சிறிய அடிப்படையிலான கைத்தொழில்
முயற்சிகளாகவும் இருந்து வரும் கைப்பணி பொருட்களின் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கு வகை செய்துள்ளது.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ