புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்கள்

நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்கள்

தமது உரிமைகளுக்காக அணிதிரள வேண்டும் என கோரும் மக்கள் ஆசிரியர் சங்கம்

கடந்தாண்டு கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரிய உதவியா ளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்தக் கொடுப்பனவான 6000 ரூபாவிற்கு மேலதிகமாக ஊவா மாகாணத்தில் மாத்திரம் மேலும் 10000 ரூபாவையும் சேர்த்து 16,000 ரூபா கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில் ஊவா மாகாண கல்வி அமைச்சர் அதனை இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன் தற்போது வழங்கப்படும் 6000 ரூபாவில் இருந்து மேலதிகமாக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மாதம் 2000 ரூபா வீதம் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் கருதி அப்போது ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

அரச நிதி பிரமாணங்களை அறியாதும் மாகாண அமைச்சின் அதிகாரங்களின் வரம்பை அறியாதும் அரசியல்வாதிகளாலும் நிர்வாகிகளாலும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள் பலிகடாக்களாக ஆக்கப்படுவதை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் யியிஇற்கு தகுதியுடையவர்களான ஆசிரிய உதவியாளர்களை உரிய பதவியில் தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன். வழங்கப்படாதுள்ள எஞ்சிய பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்த போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் அநீதியானதும் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதுமாகும். இந்நியமனம் ஆட்சேர்ப்பு விதிமுறைகளைக்கும் நிர்வாக சட்டத்திற்கும் புறம்பாக இருந்தமை மலைய மக்களின் பிரச்சினைகள் எதற்கும் உரிய தீர்வை வழங்க ஆளும் தரப்புகளும் ஆளும் தரப்போடு காலத்துக்கு காலம் கூட்டுச்சேரும் மலையக அரசியல் தலைமைகளும் தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

கல்வி அமைச்சோ அல்லது கல்வி இராஜாங்க அமைச்சோ ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையிலேயே ஆசிரிய உதவியாளர்கள் பலர் தமது பதவியை விட்டு விலகி தாம் முன்னர் செய்த தொழில்களுக்கு அல்லது புதிய தொழில்களுக்கு சென்றுள்ளனர்.

சேவையில் ஈடுபட்டுவருபவர்களும் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியிலேயே தமது கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இப்பின்னணியிலேயே ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள், தற்போதைய 6000 ரூபா கொடுப்பனவில் 2000 ரூபாவை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகள் எழுவதை தடுக்கவும், தம்மை அரசியல் தலைவர்கள் தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துவதைத் தடுக்கவும், சுய கெளரவத்துடன் தமது ஆசிரிய சேவையை வழங்கவும் ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் அவர்களுக்கு உரித்தான ஆசிரிய சேவை வகுப்பு 3 தரம் யியிற்கு சேர்க்கப்பட வேண்டும்.

இந்த அநீதியான ஆசிரிய உதவியாளர் என்ற நியமனத்தை நீக்கி ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்குள் உள்Zர்க்க செய்யும்படி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் சட்ட நீதி நடவடிக்கைகளை கடந்து ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் தமது உரிமைகளை நிலை நாட்ட அணிதிரள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.