புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபட்ட மர்ஹும் பாக்கீர் மாக்கார்

முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபட்ட மர்ஹும் பாக்கீர் மாக்கார்

எதிர்வரும் 09ம் திகதி நினைவு தினம்

முன்னாள் சபாநாயகர் மர்ஹும் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் அவர்கள் இந்த மண்ணில் தோன்றிய வரலாறு படைத்த மூத்த முஸ்லிம் தலைவர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். பேருவளையில் பிறந்தாலும் அவர் நாட்டினதும் சமூகத்தினதும் பொதுச் சொத்தாகவே கருதப்பட்டார்.

அன்னாரது வாழ்க்கையும், சேவையையும் அலசும் போது இந்த உண்மை புலனாகின்றது. இதனால் தான் ஆண்டுகள் பல கடந்தும் முஹம்மது அப்துல் பாக்கீர் மாக்கார் என்ற பெருந்தகை இன்றும் நினைவு கூறப்படுகின்றார்.

உள்ளூராட்சி அரசியலில் பிரவேசித்த பாக்கீர் மாக்கார் அவர்கள் நகரசபைத் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகராக, சபாநாயகராக, அமைச்சராக ஆளுனராக இருந்து ஆற்றிய பொதுப் பணிகளின் மூலம் அவரது திருநாமம் பல்லாண்டுகள் நினைவு கூறப்படவிருக்கின்றது.

ஏனெனில் இன்று நாட்டின் நாற்புறமும் இன ஐக்கியத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டாலும் பல்லாண்டுகளுக்கு முன்னரேயே தேசமான்ய அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப சொல்லாலும் செயலாலும் பாடுபட்டார்.

இதற்கமைய இவரின் கனவை நனவாக்க இன ஐக்கிய த்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையம் அமை க்கப்பட்டு இன்று இந்த நிலையத்தின் ஊடாக இன ஐக்கியத்தை கட்டிக் காக்கும் நோக் குடன், கருத்தரங்குகள், பகிரங்கச் சொற் பொழிவுகள் மற்றும் மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு அன் னாரது குறிக்கோளை அடைய முயற்சிகள் மேற்கொளள்ப்பட்டு வருகின்றன.

அரசியல் அரங்கில் பல உயர் பதவி களை வகித்த தேசமான்ய பாக்கீர் மாக்கார் அவர்கள் சிறந்த சட்டத்தரணியாகவும் விளங்கினார். களுத்துறை நீதி மன்றத்தில் வழக்காளிகளிடம் பணம் பெற்றுக்கொள் ளாது இலவச சேவையாகவே இப் பணியை அன்னார் மேற்கொண்டதை மக்கள் என்றும் நினைவுபடுத்துகின்றனர்.

எக் கோணத்தில் இருந்தும், சாரதி மத, இனம் பாராது அவர் ஆற்றிய சேவை அன்னாரை முஸ்லிம் அல்லாதோர் மத்தியிலும் பிர பலமடையச் செய்தது. பேருவளைத் தொகு தியில் பெரும்பான்மையின வாக்காளர்கள் அதிகமாக இருந்தும் அடிக்கடி இந்த பெரு மகன் பெரு வெற்றியீட்டினார்.

ஆங்காங்கே சிறு சிறு சச்சரவுகள் இனக் கலவரங்களாக வெடித்த போதெல்லாம் நமது முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அவர்கள் முன்னின்று அந்தக் கலவரங்களை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர உழைத்தார்.

இலங்கையில் முஸ்லிம் வீக் வாலிப முன்னணியை உருவாக்கி அதனை வழி நடத்திச் சென்ற பெருமையும் மர்ஹ¥ம் பாக்கீர் மாக்காரை சேரும். இலங்கையின் பல குக்கிராமங்களில் எல்லாம் இதன் கிளைகள் தோன்ற வழிவகுத்தார்.

இதற்காக காடுகளைக் கடந்தார், மலைகளில் ஏறி இறங்கினார், பல இடங்களுக்கு நடந்து சென்றார், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தார். தான் சபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான மும்தாஜ் மஹாலின் கதவுகள் அகலத் திறந்தன. சாதாரண தொகுதி மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில் இருந்து மக்கள் அங்கு போய் தமது குறைகளை பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். நிவாரணம் கிடைத்தது.

காலம் சென்ற பாக்கீர் மாக்கார் அவர் கள் தனது தொகுதியிலுள்ள, களுத்துறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், குறை களை நிவர்த்தி செய்யவும் தியாக உணர் வுடன் பாடுபட்டார்.

அதற்காக அடிக்கடி பாடசாலை அதிபர்களையும், கல்வி அதி காரிகளையும் ஆசிரியர்களையும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் அழைத்து கூட்டங்ள் வைத்து நிலமைகளை கண்டு அறிந்தார். அடிக்கடி கல்வித் திணைக்களத்தோடும் கல்வி அமைச்சோடும் தொடர்பு கொண்டு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார்.

அகில இலங்கை முஸ் லிம் கல்வி மகாநாட்டோடு அன்னாருக்கு முழுமையான தொடர்பு இருந்தது. முஸ் லிம்களின் கல்விப் பிரச்சினைகளை கூட் டாக ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காணும் கலமாக மேற்படி கல்வி மாநாட்டை பரி நமிக்கச் செய்தார். இவரது காலத்தில் பேரு வளைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பாட சாலைகள் எழுச்சி கண்டன. தனது வரவு செலவு நிதியில் கூடிய நிதியை கல்விக் காகவே செலவிட்டார்.

பீ. எம். முக்தார்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.