புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
அழகுக் கலைக்கு இரையான மற்றுமொரு யுவதியின் பரிதாபம்

அழகுக் கலைக்கு இரையான மற்றுமொரு யுவதியின் பரிதாபம்

அழகு கலை நிலையங்களுக்கு சென்று உயிரிழந்தவர்கள் பலர். பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு பிரபல அழகுகலை நிலையத்துக்கு சென்று அங்கு தன் முகத்தை அழகுப்படுத்திக் கொண்ட பெண் வைத்தியர் ஒருவர் இறந்தார். இவை போல் நுகேகொடை இன்னும் பல பிரதேசங்களிலும் இச்சம்பவம் இடம் பெற்றன. இப்போது கண்டியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே அழகான பெண்ணிவர் தன் அழகை மேம்படுத்திக்கொள்ள சென்று தன் உயிரை இழந்துள்ளார். “சாமிந்தி தினூஷா சமரகோன்” என்ற இந்த அழகான இளம் பெண் அம்பிடிய மெத்தேகமையை சேர்ந்தவர். ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் நண்பியொருவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இவ்வைபவத்துக்கு தினூஷாவும் அழைக்கப்பட்டிருந்தார். “நான் நாளை, திருமண வைபவத்துக்கு என்னை அழகுப்படுத்திக் கொண்டு வருவேன். கடமை முடிந்ததும் திருமண வீட்டுக்கு செல்லாமென தினூஷா நண்பிகளிடம் கூறி விடைபெற்று சென்றார். இவர் தல்வத்தை பிரதேசத்திலுள்ள அழகு கலை நிலையத்துக்கு கடந்த மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலை ஐந்தரை மணிக்கு சென்று காலை ஏழரை மணியளவில் கடமையாற்றும் தொழிற்சாலையை வந்தடைந்தார். என் அழகு எப்படி மேக் அப் கச்சிதமாயுள்ளதல்லவா பொறாமையாயிருக்கிறதா என நண்பிகளிடம் கேட்டுள்ளார். உண்மையில் இன்று நீ மிகவும் அழகாயிருக்கிறாய் என நண்பிகள் கூறியுள்ளனர்.

எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொள்வோம் என அனைவரும் கடமையிலீடுபட்டனர். பகல் உணவு வேலையில் அனைவரும் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு திருமண வீட்டுக்குச் செல்ல தயாராகினர். தினூஷா உடைகளை ஒழுங்கு படுத்தியபின் தன் உதடுகளுக்கு சிகப்பு நிற சாயத்தினை பூச தயாரானார். தினூஷா சீக்கிரம் வா நேரமாகிக் கொண்டிருக்கிறது என நண்பிகள் சப்தமிட்ட, இதோ ‘லிப்ஸ்டிக்’ பூசிக் கொண்டதும் வருகிறேன் எனக் கூறி உதடுகளுக்கு சாயம் பூசியதும் நினைவிழந்து கீழே சாய்ந்தார். இச்செய்தி பரவியதும் முழு ஆடைதொழிற்சாலையின் ஊழியர்கள் அங்கு குழுமினர். நினைவிழந்து கீழே சாய்ந்திருந்த தினூஷாவை அதிகாரிகள் தொழிற்சாலையிலுள்ள வைத்திய நிலையத்துக்கு எடுத்து சென்று முதலுதவி சிகிச்சையின் பின் கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பகல் ஒன்று நாற்பத்தைந்து மணியளவில் இவர் கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் இறந்துள்ளார் என உதவிபொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

உதடுகளுக்கு சாயம் பூசும்போது நினைவிழந்து கீழே சாய்ந்த தினூஷாவின் பிரேத பரிசோதனை கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் அதன் பிரதான சட்ட வைத்திய அதிகாரியும், நிபுணருமான சிவசுப்பிரமணியம் நடத்தினார். பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் சில பகுதிகள் இரசாயன பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மரணத்துக்கான காரணத்தை அறியமுடிமென தெரிகிறது. தினுஷா இறக்கும் போது அவருக்கு இருபத்தேழு வயதாகும்.

கண்டி உதவிபொலிஸ் அத்தியட்சகர் கமல் ரணவீரவின் ஆலோசனையை அடுத்து கலாதுஓய பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஏ. ரத்னாயக்கவின் தலைமையில் பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்க உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த நாற்பத்து மூன்று வயதுடைய ஸ்ரீயா வாசனா அமரதுங்க, கொழும்பு பொரளை றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் வைத்தியர் பி. ஏ. பிரியங்கனி ஆகியோரும் அழகு கலை நிலையங்கள் மூலம் தன் மரணத்தை தேடிக் கொண்டனர். இவை இரண்டு சம்பவங்களும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சம்பவித்தன.

“எனக்கு இருந்த ஒரே சகோதரியான சமிந்தி தினூஷா கடந்த ஐந்து வருடங்களாக ஆடைதொழிற்சாலையில் கடமையாற்றினார். நானும் அதே தொழிற்சாலையில் கடமையாற்றிகிறேன்” தங்கை தினுஷா இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார். விரைவில் இவரை திருமணம் செய்யவுமிருந்தார். அதற்கு முன் இவரை மரணம் தழுவிவிட்டதென தினுஷாவின் சகோதரன் திலான் சமரகோன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.