புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

இந்தியாவின் முதல் பெண் 'பாடிபில்டர் '

இந்தியாவின் முதல் பெண் 'பாடிபில்டர் '

ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி அஸ்வினி!

பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண் கள் பங்கேற்கும் விளை யாட்டு. இந்திய பெண்கள் அந்த பக்கமே திரும்புவதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கரு த்தை உடைத்து எறிந்திருக்கிறார் ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி ஒருவர். மும்பையை சேர்ந்த அஸ்வினி வாஸ்கர் என்பவர்தான் அவர். இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பாடிபி ல்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை அஸ்வினி சாதாரண இந்திய பெண்களை போலத்தான் இருந்தார். ஓவர் வெயிட் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்தார். தோழிகள் கூறியதன் பேரில், உடல் வெயிட்டை குறைக்க ஜpம்முக்கு சென்றவர்தான் தற்போது பாடிபில்டராக மாறி விட்டார்.

ஜpம்மில் முதலில் சாதாரண வெயிட்டை தூக்கிப் பழகிய அஸ்வினி, அதற்கேற்றார் போல் புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டார். உணவுக்கேற்ற வகையில் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அஸ்வினியின் உடல் மெல்ல மெல்ல முறுக்கேறத் தொடங்கியது.

இதன் காரணமாக அஸ்வினியின் ஆர்வம் அதிகரித்தது. முழு நேர பாடிபில்டர் போட்டிகளில் பங்கேற்பதற்காக மீன்வளத்துறை ஆராய்ச்சி கல்லூரியில் பார்த்து வந்த வேலையையும் உதறினார். அஸ்வினியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது தந்தை மிகுந்த ஊக்கமளித்தார்.

தற்போது 32 வயதான அஸ்வினி, 2013ஆம் ஆண்டு முதல் பாடிபில்டராக இருந்து வருகிறார். இதுவரை 7 சர்வதேச போட்டிகளில் அஸ்வினி பங்கேற்றுள்ளார். ஆணழகர்களுக்கு கிடைப்பது போன்ற ஸ்பான்சர்கள் பெண்ணழகிகளுக்கு கிடைப்பதில்லை என்ற நிலை இந்த துறையில் இருக்கிறது. இதுவரை ஒரு நிறுவனம் கூட அஸ்வினியை ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை. ஆனால் தனது கடின உழைப்பு, விரைவில் தனக்கு நல்ல ஸ்பான்சர்'pப் கிடைக்க வழி வகை செய்யும் என்று அஸ்வினி நம்புகின்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.