புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது போன்ற பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்று யாருக்கும் தெரிவதில்லை.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும்.

மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப் புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும்.

அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத் தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்சினைகளை ஏற்ப டுத்தும். உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப் பிணிகள் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத் தம் உருவாகும் வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுகளை சாப்பிட நேர்ந் தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறை யும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.