புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

நம் நாட்டில் புழக்கத்திலிருந்த நாணயக்குற்றிகள்

நம் நாட்டில் புழக்கத்திலிருந்த நாணயக்குற்றிகள்

இலங்கையின் நாணயவியல் வரலாற்றில் 1640முதல் 1796 வரையான காலப்பகுதியில் ஆட்சிசெய்த ஒல்லாந்தரின் நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை கரையோர மாகாணங்களில் புழக்கத்திலிருந்தன சில வேளைகள் கண்டி இராசதானி நாணங்களுடன் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையும் காணப்பட்டது.

இக்காலத்தில் அப்பாஸி. பேர்சியன். அட்டகாசி, பஸாரூக்கன். 1 குயிட், பார்ண்டர், காகாசி சியோபாங்க கொயிர் சங்கு. செப்பு டுகிட் துட்டு. இரட்டை வெள்ளத்துண்டு, டியூகட், டியூகாடூன், பணம். கில்டர் வெள்ளி, கொயிஸிலாட்டர், லரின் அரைலதீன் (1785- சிறிய நீள்துண்டுவடிவம்) லயன்டொலர் முஹம்மரி, ஒர்டெகன், பகோடா, போர்ட்டநோவா, புளிகட், ஸ்டார், ஸ்கொட், சுல்தானி, றிக்ஸ்டொலர், ரூபாய்வகைகள், சில்லிங் செஸ்டிஹல்வன். ஸ்பானிஸ் றியல், ஸ்டுவ்வர். சுறாட் தம்மகஸன், வெனிடியன் போன்ற நாணயங்கள் சுற்றோட்டத்திலிருந்தன என்பதை நாணயவியலாளர் கொட்ரிங்டன் உறுதிப்படுத்துகின்றார்.

யாழ்ப்பாணம், காலி, திருகோணமலைப்பகுதிகளுக்கு என யாழ்ப்பாண இரட்டை ஸ்டுவியர், காலி இரட்டை ஸ்டுவியர் மற்றும் திருகோணமலை ஸ்டுவியர் நாணயங்கள் வெளியிட்டனர். டச்டுயிட் பெரும்பான்மையினரால் சல்லி என அழைக்கப்பட்டது.
படத்தில் VOC எனும் எழுத்தகையும் வி எனும் கொழும்பைக் குறிக்கும் வி எழுத்தையும் 4 3/4 ஸ்டிவர் எனும் பெறுமதியையும் இந்நாணயத்துண்டின் இருபுறமும் கொண்டுள்ளதைக் காணலாம்.
6.5 செ.மீ நீளமுடைய இந்நாணயத்துண்டின் நிறை 63.41 கிரமாகும்.

கே. ஏ.அலீம், கம்பளை
 

வானொலி!

எந்தன் பெயர்தான் வானொலி
எவர்க்கும் வழங்கும் தேனொலி
என்னை எவரும் விரும்புவார்
எளிதாய் மக்கள் வாங்குவார்!

எல்லாச் செய்தியும் கூறிடுவேன்
எவர்க்கும் களிவாய் நட்பாவேன்
கல்லார் கூட என்னையே
காசு கொடுத்து வாங்குவார்!

அஸ்மாபாரிஸ், மள்வானை.
 

நாடுகளும் தேசிய பறவைகளும்

01. இந்தியா - மயில்
02. இலங்கை - காட்டுச்சேவல்
03. நியூசிலாந்து - கிவி
04. அல்பேனியா - தங்கக் கழுகு
05. ஜேர்மன் - தங்கக் கழுகு
06. அமெரிக்கா - கழுகு
07. பிரான்ஸ் - சேவல்
08. டென்மார்க் - அன்னம்
09. தென்னாபிரிக்கா - நீல நாரை

ஸியாத் மரியம்
தரம் - 05தி,
க/ மல்வானஹின்னை மு.வி,
அக்குறனை.
 

ஓடி விளையாடு பாப்பா

“ஓடி விளையாடு பாப்பா- நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா”
என்று சின்னஞ் சிறுவர்களை பார்த்துக் கூறுகிறார். பாட்டுக்கொரு புலவரான பாரதியார். உடல் நலம் பெற வேண்டுமானால் நாம் ஓடி விளையாட வேண்டும். அப்பொழுதுதான் இரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் உரம் பெறும். ஆரோக்கிய வாழ்வுக்கு இது வகை செய்யும்.

“ஆரோக்கியம் உள்ள உடலில்தான் ஆரோக்கியமான மனநலம் இருக்கும்” என்பர். பச்சிளம் குழந்தைப் பருவத்திலிருந்தே ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இளஞ் சிறார்கள் தங்கள் வயது கேற்ப பல விளையாட்டுக்களிலும், தேகப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தல் அவர்களது உடல் வளர்ச்சிக்கு அவசியமாகும்.

அங்கத்துவ இல. 52
என். எம். ஆயிஷா,
தரம் - 04(ஹி)
கம்பளை சாஹிரா தேசிய பாடசாலை, கம்பளை.
 

உலகில் புகழ் பெற்ற பெரியோர்களுக்கான நாமங்கள்

வங்காளத்தின் சிங்கம் - முஜீபு ரஹ்மான்
கிங்கிங் மேக்கர் - எர்குல் ஒப் வார்விக்
அங்கல் ஹை - ஹொசிமின்
கிங் மேக்கர் (இந்தியாவில்) - காமராஜர்
பாபுஜி (தேசத் தந்தை) - காந்தி அடிகள்
கவிக்குயில் - சரோஜினி நாயுடு
இளவரசி - எலிசபெத்
இரும்புச் சீமாட்டி - மார்கிரெட் தட்சர்
இரும்பு மனிதர் - பிஸ்மார்க்
விதி மனிதன் - போனபாட் நெப்போலியன்
குரு தேவ் - இரவிந்திரநாத் தாகூர்
கோல் பிங்கர் - சிங் கொனரி (நடிகர்)
நாவலர் - ஆறுமுக நாவலர்
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன் (விருத்தாச்சலம்)
கிளியோபற்றா - எலிசபெத் டெய்லர்
கஸ்மீன் சிங்கம் - செய்க் அப் அப்துல்லா
Gaya of kalkatha - அன்னை தெரேசா

மிப்ஜாலா மகாரிம்
யோனகபுர, திக்குவல்லை.

 


லேக்ஹவுஸ் இந்து மன்றமும் இங்கிரிய தமிழருவி நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு கடந்த ஞாயிறன்று (09) இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவு தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள். (படங்கள்: பி.வீரசிங்கம்)


|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.