புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

ஆசிய போட்டிகளில் லங்கைக்கு முதல் தங்கம்

ஆசிய போட்டிகளில் லங்கைக்கு முதல் தங்கம்

17வது ஆசிய போட்டிகள் (Asian Games) தற்போது கொரியாவின் இன்ச்சியோன் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இம்முறை தடகள மற்றும் ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்களால் தங்கம் வெள்ள முடியாமல் போனாலும், இலங்கை கிரிக்கெட் அணியினர் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியினர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினரை 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லஹிரு திரிமான்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி இலங்கையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடாத போதும் தலைவர் திரிமான்ன (57) மற்றும் சன்திமாலின் (33) சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 19.1 ஓவரில் 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சாதாரண ஓட்ட இலக்கை (131) பெற்றுக்கொள்ள களமிறங்கிய ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை வீரர்கள் சிறப்பான களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சின் மூலம் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தனர். இதன்படி ஆப்கானிஸ்தான் அணியினர் 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 65 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர். இலங்கை 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது.

இதற்கு முன்னர் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3ம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை இதுவரை (03.10.14) வென்றெடுத்துள்ள ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி ஆகிய பதக்கங்கள் இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்கனைகளால் என்பது விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளிக்கிழமை (03.10) வரை நடைபெற்ற ஆசிய போட்டிகளின் படி சீனா அதிக தங்கம் வென்று முதல் இடத்தைப் பெற்றிருந்தது. முதல் 5 இடங்களைப் பிடித்திருந்த நாடுகள் பின்வருமாறு:

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 149 107 81 337

2. கொரியா 77 71 80 228

3. ஜப்பான் 46 73 76 195

4. கஸகஸ்தான் 28 22 32 82

5. ஈரான் 21 18 17 56

பதக்கப்பட்டியலில் இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலத்துடன் மொத்தமாக 57 பதக்கங்களை பெற்று 8வது இடத்திலும், இலங்கை ஒரு தங்கம் ஒரு வெண்கலத்துடன் மொத்தமாக 2 பதக்கங்களை வென்று 27வது இடத்தையும் பிடித்திருந்தன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.