புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 

சொந்த மண்ணில் பிரேஸில் கிண்ணத்தை கைப்பற்றும்

சொந்த மண்ணில் பிரேஸில் கிண்ணத்தை கைப்பற்றும்

கெய்ல் நம்பிக்கை

பீபா உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இம் முறை பிரேஸிலுக்கே உள்ளது என மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீபாவின் 20 ஆவது உலகக்கிண்ண கால்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறுவயது முதலே கால் பந்து ரசிகன், பாடசாலைக் காலத்தின் போது 14 வயதுக்குட்பட்டோருக்கான கால் பந்து அணியை வழிநடத்தியிருக்கிறேன். பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்பும் கால்பந்துதான் விளையாடுவேன். அப்போதெல்லாம், கிரிக்கெட் பற்றிய எண்ணம் இருந்ததே கிடையாது.

மேலும் இம் முறை உலகக்கிண்ண கால் பந்து தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எப்போதுமே நான் பிரேஸில் அணியின் ரசிகன். இம்முறை சொந்த மண்ணில் உலகக் கிண்ணத் தொடர் நடப்பது பிரேஸில் அணிக்கு நெருக்கடி தரலாம். ஆனாலும் சிறப்பான திட்டத்தை அமைத்து அவ் அணி சம்பியன் பட்டம் வெல்லும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

 

பிபா உலக கோப்பை 2014 பிரிவுகள் விவரம் அறிவிப்பு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் ஜூன் 12ம் திகதி தொடங்கி ஜுலை 13ம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக முதலில் லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் அணிகள் மற்றும் லீக் சுற்றுக்கான அட்டவணையை தீர்மானிப்பதற்கான குலுக்கல் பிரேசில் நாட்டின் கோஸ்டா டு சாபே நகரில் நடந்தது. ஜுன் 12ம் திகதி நடக்கும் தொடக்க போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் குரோஷியா அணிகள் மோதுகின்றன.

ஏ பிரிவு பிரேசில் குரோஷியா மெக்சிகோ கேமரூன்

பி பிரிவு ஸ்பெலின் நெதர்லாந்து சிலி அவுஸ்திரேலியா

சி பிரிவு கொலம்பியா கிரீஸ் ஐவரி கோஸ்ட் ஜப்பான்

டி பிரிவு உருகுவே கோஸ்டாரிகா இங்கிலாந்து இத்தாலி

இ பிரிவு சுவிஸ்சர்லாந்து ஈக்வடார் பிரான்ஸ் ஹோண்டுராஸ்

எப் பிரிவு அர்ஜென்டினா போஸ்னியா ஹெர்ச்கோவா ஈரான் நைஜீரியா

ஜீ பிரிவு ஜெர்மனி போர்ச்சுகல் கானா அமெரிக்கா

எச் பிரிவு பெல்ஜியம் அல்ஜீரியா ரஷ்யா தென் கொரியா

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.