புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 

நான் யாரையும் காதலிக்கவில்லை

நான் யாரையும் காதலிக்கவில்லை

சுரேஷ் ரெய்னா

தான் யாரையும் காதலிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்திய நடிகை ஸ்ருதி ஹாசனை இவர் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இதனை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ. பி. எல். தொடரில் சென்னை அணி ஆடும் போட்டிகளின் போது ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது பிரசன்னமாவார். இதனால் ரெய்னாவுக்கும் ஸ்ருதி ஹாசனுக்குமிடையே காதல் மலர்ந்துள்ள தாகவும் அவர்கள் வெளியில் பல இடங்களில் சந்தித்துக் கொள்வதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையிலேயே இதனை மறுத்துள்ள ரெய்னா தான் யாரையும் காதலிக்கவில்லை எனவும் ஸ்ருதி ஹாசன் தனது நல்ல நண்பி எனவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இச் செய்திகளை மறுத் துள்ள ஸ்ருதி ஹாசனும் தனக்கும் ரெய்னாவுக்கும் இடையே நல்லதொரு நட்பே உள்ளதாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.