புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
பிரெஞ்சு வசந்த விழாவில் ஸ்ரீநாத் கிறிஸ்தோபர் சமரசிங்க

பிரெஞ்சு வசந்த விழாவில் ஸ்ரீநாத் கிறிஸ்தோபர் சமரசிங்க

இம்மாதம் இலங்கை வருகிறார் கிறிஸ்தோபர்

இலங்கை வேடர்களுடனும் சினிமா வெறியுடனும் பிரான்சில் இருக்கும் ஸ்ரீநாத் கிறிஸ்தோபர் சமரசிங்க தனது பிரஞ்சு திரைப்படமான

“Un nuage dans un verre d’ eau” (A cloud in the glass of Water) இனை பரிசளிப்பதற்காக ஜூன் மாதம் இலங்கை வரவுள்ளார். இத்திரைப்படம் இல ங்கை பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் சினிமாவைக் கொண்டு தரு வதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய முதலீட்டாளர் சேவை அலுவலகம் கோட்டை அலியா ன்ஸ் ப்ரோன்சேநிலையத்துடன் இணைந்து ஸ்ரீநாத் அவர்களின் முயற்சிக்கு கைகொடுக்க முனைந்துள்ளது. இத்திரைப்படமானது காணாமல் போன தனது தாத்தாவை தேடிச் செல்லும் அடிப்படையாகக் கொண்டது. இதில் இரண்டு கதாபாத்திரங்கள் அடிப்படையாக உள்ளன. அதில் ஒருவர், முன்னாள் எகிப்திய பிரஜையான நவுன் என்பவரும் மற்றையவர் அண்ணா என்னுமொரு விபசார பெண்மணியும் ஆவர். திருநவூன் மற்றும் அண்ணா ஆகிய இருவரும் ஒன்றாகக் குடியிருக்கின்றனர். இதன் போது நவூனின் பேரரான கலீல் இவர்கள் இருவரினது உறவை படப்பிடிக்கின்றான். காலம் கடந்து நவூன் மர்மமான முறையில் காணாமல் போகிறார். ஏமாற்றம் மற்றும் வருத்தத்தின் பிடியில் அண்ணாவும் நவூனை தேட ஆரம்பிக்கின்றார். இத்திரைப்பட தயாரிப்பாளர் இத்திரைப்படத்தை தனது சொந்த அனுபவத்தையும் ஒளிப்பதிவில் தனது அறிவையும் உள்ளடக்கிய சிறந்த முறையில் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஸ்ரீநாத் கலைத்துறையிலும் ஒளிப்பதிவிலும் முதுமாணி பட்டம் பெற்றவர். அவர் பட்டப்படிப்பு காலத்திலிருந்தே பிரஞ்சு இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர் செர்ஜ் லு பேரன் ஆகியோருடம் இணைந்து செயல்பட்டார். இதுவே அவரை தன்னை ஒரு படத் தயாரிப்பாளராக செதுக்கிகட கொள்ள ஏதுவாக அமைந்தது.

ஸ்ரீநாத் அவர்களின் இந்த இலங்கை விஜயம் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டம் ஒன்றினை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

மேலும் ஸ்ரீநாத் அவர்கள் சினிமா துறையின் மூலம் இலங்கைக்கும் பிரான்சிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்த முயல்கிறார். அதே நேரம் இவர் சந்திரன் ரத்னம் போன்ற இலங்கை சினிமா துறையில் பிரமுகர்களை சந்திக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.