புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 

டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடை போட்டி

டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடை போட்டி

இலங்கையின் சிறந்த புத்திகூர்மையான மாணவர்களை தெரிவு செய்வதற்கான மாபெரும் போட்டித்தொடரின் இறுதிக்கட்டத்தின் விறுவிறுப்பு அதிகரித்த வண்ணமுள்ளது. வெற்றியீட்டும் அணியின் பாடசாலைக்கு 1,000,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும். டோக்கியோ சீமெந்து மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் பாடசாலைகளுக்கி டையிலான வினா விடை போட்டி, அரையிறுதி கட்டத்தை எய்தியுள்ளது. விறுவிறுப்பான முறையில் இடம்பெற்று வரும் இந்த போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கையின் பாடசாலைகளை சேர்ந்த புத்திகூர்மை யான மாணவர்களை கொண்ட நான்கு அணிகள் பங்கேற்கவுள்ளன. எதிர்வரும் வாரங்களில் மில்லியன் கணக்கான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமது தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் அமர்ந்திருந்து இந்த போட்டித்தொடரை கண்டு களிப்;பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டித் தொடரின் இறுதியில் வெற்றியீட்டும் அணிக்கு டோக்கியோ சீமெந்து மூலம் 1 மில்லியன் ரூபா அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாக திகழும் டோக்கியோ சீமெந்து, இது வரை இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு மொத்தமாக 3.2 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நாளி கையில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது முதல், டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கிடையிலான வினா விடை புதிர் போட்டியின் மூலமாக, 500க்கும் அதிகமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் அறிவுத்திறனை பரிசோதித்துள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் 2

உள்ளடங்கலாக சுமார் 9700 பாடசாலைகளுக்கு அழைப்பிதழ்களை டோக்கியோ சீமெந்து அனுப்பியிருந்தது. இதிலிருந்து 532 பாடசாலைகள் தமது சம்பியன் அணிகளை இந்த போட்டிகளுக்காக நியமித்திருந்தன. இந்த 532 மாவட்ட மட்டத்திலான பாடசாலை அணிகளிலிருந்து தேசிய மட்டத்துக்காக 32 அணிகள் தெரிவாகியிருந்தன. இதிலி ருந்து அடுத்த சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகியிருந்தன. ஆயினும், மாணவர்களின் அறிவுத்திறமையை பாராட்டும் வகையில், பங்குபற்றி வெளியேறிய 24 அணிகளுக்கும் தலா 100,000 ரூபா வீதம் டோக்கியோ சீமெந்து மூலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், பங்குபற்றிய அணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உணவு வேளைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் டோக்கியோ சீமெந்து முன்னெடுத்திருந்தது. காலிறுதி சுற்றில் போட்டியிட்ட எட்டு அணிகளிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.