புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 

ஹொல்சிம் விருதுகள் 2014

ஹொல்சிம் விருதுகள் 2014

ஹொல்சிம் விருதுகள் தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் விடுத்துள்ளது. ஹொல்சிம் விருதுகள் (பிரதான பிரிவு) என்பது வடிவமைப்பாளர்கள், திட்டமிடும் அதிகாரிகள், பொறியியலாளர்கள், திட்ட உரிமையாளர்கள், நிர்மாணிப்போர் மற்றும் நிர்மாண நிறுவனங்கள் போன்ற தொழில்நுட்ப, சூழல்பொருளாதார மற்றும் கலாசார பிரச்சனைகள் தொடர்பான நிலையான பதிலளிப்புகளை காண்பிக்கும் வகையில் நிலையான நிர்மாண மற்றும் கட்டடங்களை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பங்கேற்க முடியும்.

திட்டங்கள் வடிவமைப்பை பொறுத்தமட்டில் உயர்ந்த மட்டத்தை அடைந்திருத்தல் வேண்டும். செயற்படுத்துவது தொடர் பில் உயர்ந்த நிகழ்தகவை கொண்டிருப்பதுடன், 2013 ஜ{லை 1ஆம் திகதிக்கு முன்னதாக நிர்மாண செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கக்கூடாது. இந்த போட்டி எதிர்காலத்துக்கு பொருத்தமான திட்டங்கள் மற்றம் அடுத்த தலைமுறைக்கான சாமர்த்தியமான சிந்தனைகள் (இளம் நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவு) போன்றவற்றையும் எதிர்பார்க்கிறது.

அனைத்து விண்ணப்பதாரிகளும் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட ;டவர்களாக இருத்தல் வேண்டும். (பிறந்த திகதி 1982, ஜ{லை 2 முதல், 1996, மார்ச் 24) மற்றும் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் 2013 ஜ{லை 1ஆம் திகதிக்கு முன்னதாகஆரம்பித்திருக்கக் கூடாது. சுவிஸ் நாட்டை தளமாக கொண்ட நிலையான நிர்மாணத்துக்கான ஹொல்சிம் மையம் மூலம் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது. உலகின் ஐந்து பிராந்தியங்களில் இந்த போட்டி 2013/14 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுவதுடன், உலக மட்டத்தில் 2015இல் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிராந்திய வெற்றியாளர்கள் 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மொஸ்கோவில் (ஐரோப்பிய பிராந்தியத்துக்கு), டொரான்டோ (வட அமெரிக்கா), மெடலின் (இலத்தீன் அமெரிக்கா), பெய்ரூட் (ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு) மற்றம் ஜகார்த்தா (ஆசிய பசுபிக்) ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள ஹொல்சிம் விருது கொண்டாட்ட நிகழ்வுகளின் போது அறிவிக்கப்படுவார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.