புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

கால்நடை அபிவிருத்தியில் இலங்கை

கால்நடை அபிவிருத்தியில் இலங்கை

(கடந்த வாரத் தொடர்ச்சி)

ஹீற்போது இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆய்வுகூட வசதிகள் என்பன ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. விலங்கு நோய் மற்றும் தடுப்பு கண்காணிப்பு சேவையானது நாட்டில் உட்பிரவேசிக்கும் அனைத்து வகையான வெளியூர் மிருக நோய்களுக்கும் எதிரான முன்வரிசை பாதுகாப்பு முறைமையை கொண்டுள்ளது. இனவிருத்திக்கான கோழிகளின் இறக்குமதியின் பின்னரான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதையும் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான மீன் உற்பத்தி துறையில் தர முன்னேற்றத்தையும் குறிக்கோளாக கொண்டு 2008ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களாக விலங்கு சுகாதார பாதுகாப்பை விஸ்தரித்தல் மற்றும் இலங்கையில் கால்நடை உற்பத்தி மற்றும் தரத்தை அடைந்து கொள்வதற்கும் உறுபடுத்துவதற்காக ஆய்வுகூட கண்டுபிடிப்பு வலையமைப்பை விஸ்தரித்தல், கோழி சுகாதார முறையின் ஊடாக கோழி இறைச்சி முட்டை ஏற்றுமதி வசதிகள், இலங்கையில் பாற்பண்ணை அபிவிருத்திக்காக வர்த்தக ரீதியில் திவன பயிரை விஸ்தரித்தப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாடுகள் மரபியல் இன விருத்தி

உள்நாட்டில் மாடுகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையினை உயர்த்துவதற்காகவும் மற்றும் பால் உற்பத்தியினை மேம்படுவதற்காகவும் அமுல்செய்யப்பட்ட பிரதான நிகழ்ச்சியாக தரமான காளைகளின் விந்துகளை பயன்படுத்தி செயற்கை முறை சினைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் பால் உற்பத்தியினை மேம்படுத்துதல், விந்து உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல், செயற்கை முறை சினைப்படுத்தல், தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சி அளித்தல், புல் வெட்டும் புல் உற்பத்தி ஆகியவற்றில் பயிற்சி வழங்குதல் என்பன இந்நிகழ்ச்சி நிரலில் பிரதான உள்ளடக்கமாகும். இவ்வருடத்தினுள் குண்டசாலை மற்றும் பொலன்னறுவை செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையங்களில் 126,858 அளவை விந்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரதேச மிருக வைத்திய பணிமனை களினால் 139,548 செயற்கைமுறை சினைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையானது, ஏறக்குறைய 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதுடன், உயர் விளைச்சலைக் கொண்ட தெங்கு தோட்டங்களும் இதில் அடங்குகின்றன. கால்நடை பண்ணையாளர்களுக்கு உயர்ரக இனவிருத்தி விலங்குகளும், கால்நடை மற்றும் விவசாய உற்பத்திகளும் இந்நிறுவனத்தினூடாக வழங்கப்படுகின்றது.

லேன்லீப் ஆனது தேசிய கால்நடை அபிவிருத்தி சபை மற்றும் லேன்லிப் அராபிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இதன் 51% பங்குகளை தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும், மேற்படி லிபிய நிறுவனமும் மேற்கொண்டுள்ளன.

மேற்படி செயற்பாடானது பால் உற்பத்தி, கால்நடை உற்பத்தி, கால்நடை சுகாதாரம் சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை முன்னரை காட்டிலும் தற்போது அதிவேகத்தில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. இவ் அபிவிருத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தால் படிப்படியாக அபிவிருத்தி அடையும் என்பதில் ஐயமில்லை. இதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு, பொறுமை மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.