புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்
 

* உலகத்தில் மிகப்பெரிய வைரம் எது?

கல்லினன் வைரம்

* அமெரிக்கக் கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?

13 கோடுகள்

* நொபெல் பரிசு எந்த ஆண்டு முதன் முதலில் வழங்கப்பட்டது?

1901ம் ஆண்டு

* மனித உடலில் முதலில் உருவாகும் உறுப்பு?

இதயம்

* மனித உடலில் உள்ள எழும்புகளின் எடை எவ்வளவு?

9Kg

* மண்டையோட்டில் அசையக் கூடிய பகுதி எது?

கீழ்த்தாடை

* மனித உடலில் குருதியோட்டம் இல்லாத பகுதி எது?

கண்களின் கருவிழி

* கணிதத்தின் தந்தையென அழைக்கப்படுபவர் யார்?
 

ஆர்க்கிமீடிஸ்

எம்.எம்.எப். நுஸ்ஹா.

தரம்-08, கா/ துந்துவை முஸ்லிம் வித்தியாலயம்.


சாதிக்க தன்னம்பிக்கை வேண்டும்

இன்றைய காலம் போட்டி மிகுந்ததொரு உலகத்தையே எம் கண் முன் காட்டி நிற்கின்றது. காலையில் கண் விழித்தது முதல் உறங்கும் வரை ஓய்வின்றிய, பரபரப்பானதொரு சூழ்நிலையையே நாம் காண்கின்றோம். முன்பு போன்று சிறுவர்களுக்கு கூட ஓடியாட விளையாட நேரமின்றிய ஒரு நெருக்கடியான காலத்திலே நாம் வாழ்கின்றோம். முன் பள்ளி மாணவர்கள் கூட போட்டி மிக்க இவ்வுலகை சவாலாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இக்கால கட்டத்தில் நாம் மிக்க அவதானமாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் தவறி ஒருவர் விழுந்தால் அவரை மிதித்துக் கொண்டோடும் மனிதப் பண்பற்றவராக நாம் மாறிவிடக் கூடாது. விழுந்தவரை கை கொடுத்து எழுப்பி விட்டு ஓடும் நல் மனிதராக மாற வேண்டும், தவறி விழுந்தவர் தன்னம்பிக்கையிழந்து, தவறான முடிவுகளுக்கு போய் விடக்கூடாது.

இன்று பரீட்சை தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாத கோழைகளாக எம் மாணவர்கள் மாறி வருவது கவலைக்குரியவிடயமாகும். பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காது போனவர்கள் தற்கொலை செய்த கொள்ள துணிவது முட்டாள் தனமான விடயமாகும். பரீட்சைகள் நிறைந்த வாழ்க்கையில் வெறும் பாடசாலை பரீட்சை தோல்விக்கு முடிவு தற்கொலையென்றால், நிஜ வாழ்க்கையை அதாவது பாடசாலை வாழ்க்கைக்கு பின்புள்ள வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது?

மாணவப் பருவத்தில் மனதில் தைரியம் வளர்க்கப்பட வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் துணிவு வேண்டும். விழும் ஒவ்வொரு தடவையும் எழும் தைரியம் இருக்க வேண்டும். வாழ்வதற்கான வழிகள் நிறைந்துள்ளது. தோல்விகளை கண்டு துவண்டுவிடாது. வெற்றிப்படியை அடைய முயல வேண்டும். தற்கொலை என்ற எண்ணம் மனதில் இருக்கவே கூடாது. தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் வாழப்பழகிக் கொள்வோம். பிறரையும் எம்முடன் சேர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணிப்போம்.

திருமதி - முஸ்ரியா அபால்தீன் சியாம், வடதெனிய.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.