புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில் 13ஆவது மக்கா மாநாடு

உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில் 13ஆவது மக்கா மாநாடு

மக்கா முகர்ரமா 13ஆவது மக்கா மாநாடு நேற்று உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில் ஆரம்பமானது. மாநாடு இன்றும் நடைபெறும். இந்த மாநாட்டில் இலங்கையின் விசேட பிரதிநிதியாக ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி கலந்து கொண்டார்.

சவூதி அரேபியாவுக்கான இலங்கை கவுன்ஸிலர் டாக்டர். உதுமா லெப்பையும் உடன் பங்கேற்றார்.

மக்காவின் ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசர் இங்கு விசேட உரையாற் றியதுடன் சவூதி மன்னரின் செய்தி யையும் வாசித்தார். உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் அப்துல்லா பின் அப்துல் முஹ்ஸின் அல்துர்க்கியும் அங்கு உரையாற்றினார்.

இதேவேளை, மக்காவிலிருந்து தினகரன் வாரமஞ்சரிக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பெளசி, தான் இன்று மதீனா செல்வ தாகவும் ஹாஜிகளின் நலனைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை ஹாஜிகளின் வசதி தொடர்பில் மக்காவிலிருக்கும் இலங்கைக் குழு அதிக கரிசணை கொண்டுள்ளதாகத் தெரிவித்த பெளசி, காலநிலை சீராகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும், ஜனாதிபதிக்காகவும் இலங்கை ஹாஜிகள் பிரார்த்தனை புரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.