புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* செய்தி இருட்டடிப்பில் உற்சாகம் ; விசுவாசமா? நன்றிக் கடனா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை, நிதி ஊழல் விவகாரம் தொடர்பான சுரேஸ் எம். மற்றும் 4 கூட்டுக் கட்சிகளின் செய்திகளுக்கு யாழ். கொழும்பு இணைந்த இரு பத்திரிகைகளுமே இருட்டடிப்புச் செய் தன. அப்பத்திரிகையின் தலைவருக்கு தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் பதவியை வழங்கியதால் இந்த நன்றிக் கடன். சரி அப்போ தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியத் துவம் வாய்ந்த இந்திய புதுடில்லி விஜயத்தை இப்பத்திரி கைகள் இருட்டடிப்புச் செய்யக் காரணம் என்ன? தன்னையும் அழைத்துச் செல்லாமையா? அல்லது வேறு எவருக்காவது விசுவாசமாக நடக்க முயற்சியா? இதுதான் பத்திரிகா தர்மமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. எல்லாம் அந்தப் பவனுக்கே வெளிச்சம்!

உள்நாட்டில் கூடிக் கதைத்தால் கூட இருப்பவர்களால் தொல்லை என நினைக்கும் ஒரு தனித்துவக் கட்சிக்காரர் இப்போது இங்கிருந்து இந்தியா சென்று கேரளாவில் ரூம் போட்டு கதைத்துப் பேசி வருகிறார்களாம். தமிழ் நாட்டில் தங்கியிருந்து கதைத்தாலும் கதை கசிந்துவிடும் என்பதால் கேரளாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நல்ல விடயம் என்னவென்றால் எவருமே கட்சிக் காசில் பயணிப்பதில்லை. எல்லாமே சொந்தச் செலவுதான். உள்நாட்டில் கடற்கரைப் பக்கமாக நடந்து சென்று காற்றும் வாங்கி கதைக்க வேண் டிய விடயங்களை கடல் கடந்து சென்று காதோடு காதா கப் பேச வேண்டியதன் அவசியம்தான் என்னவோ? நான்காகப் பிரிந்த கட்சி நாற்பதாகப் பிரிய விடக்கூடாது என்பதில் தலைவர் மிகவும் கராராகத்தான் இருக்கிறாராம்.

* கனவான்கள் கட்டிக் காத்த தமிழ் சங்கத்தின் சுவாரஸ்யமான தேர்தல்

தனது அப்பழுக்கில்லா தமிழ்ச் சேவையால் உலகறிந்த தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் உலகறிந்த விடயம்தான். தேர்தல் நடத்தி நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வது என்பது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை விடவும் பெரிய நிகழ்வாகிவிட்டது. நியமனப் பத்திரம் தாக்கல் செய்தோர் வாகனம் பிடித்து கூட்டமாகச் சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபடுவர். முன்னொரு காலத்தில் படித்த, உயர் பதவிகளில் தொழில் பார்க்கும் மரியாதைக்குரியவர்களை அதே உயர் ரக வர்க்கத்தினர் ஒன்றுகூடி தெரிவு செய்து ஆட்சியை வழங்கி வந்தனர். இப்போது எல்லாமே தலை கீழாகவே நடப்பதாக நாம் சொல்லவில்லை. மாலைவேளை கூடும் மூத்த ஊடகவியலாளர்களும், பிரமுகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். தலைநகரில் தமிழனுக்கு அதிலும் தமிழ்ப்பேசும் சமூகத்திற்குள்ள ஒரு உயர் அமைப்பு இது. இதில் உங்களது உள்ளூர் அரசியலை எவரும் புகுத்தக் கூடாது.பின்னர் அது அரசியலாகி நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புண்டு. எத்தனையோ உயர் கனவான்கள் கட்டிக்காத்த சங்கத்தை விட்டுவிடுங்கள். அது தமிழ் சேவையை மட்டும் நடத்தட்டும். அரசியலில் ஈடுபடுவோர் தம்மை வளர்த் துக்கொள்ள தமிழ்ச் சங்கம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை. அரசியலில் ஈடு படுவோர் சங்க நிர்வாகத்தில் இருப்பது முறையல்ல.

இதற்கு பாஸ்கரா ஒரு உதாரண புருஷர். அந்த சிறிய வயது பெரிய இளம் அரசியல்வாதிக்குள்ள மனப்பக்குவம் மூத்த, சிரேஷ்டமானவர்களுக்கு ஏன் இன்னமும் வரவில்லை. அத்துடன் இது ஒரு ஊரின் சங்கமும் இல்லை. ஊரு க்குச் சங்கம் தேவையெனில் அதை புறம்பாக உங்களது ஊர் மக்களை மட் டும் அழைத்து அமைத்துக் கொள்ளுங்கள். வளர்ந்த சங்கத்தில் கஷ்டப்ப டாது ஏறி ஊருக்குச் சொகுசு சவாரி செய்வது அந்த ஊர்களுக்குத்தான் அழ கல்ல.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.