புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
UNP, SLMC யுடன் கூடிக்குலாவும் TNA தன்னை பொருட்டாக மதிப்பதில்லையாம்!

UNP, SLMC யுடன் கூடிக்குலாவும் TNA தன்னை பொருட்டாக மதிப்பதில்லையாம்!

தனது பேஸ் புக்கில் மனோகணேசன் போட்டுத்தாக்கு

வெளியே தெரியாத உண்மை

வட கிழக்கு தமிழ் சமூகத்துக்கு நேரடி தலைமையை கூட்டமைப்பு ஏற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது, இந்த மூன்று வருடங்களில் அவர்கள், எமது கட்சியுடன் ஒருமுறைகூட எந்த ஒரு அரசியல் கலந்தாலோசனையும் நடத்தியது கிடையாது நாங்கள் வடக்குக்கு சென்று அல்லது கொழும்பில் ஏற்பாடு செய்து கலந்து கொள்ளும் பல ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் போது, என்னுடன் சம்பிரதாயபூர்வமாக அவர்களில் சிலர் சில நிமிடங்கள் உரையாடியுள் ளார்கள். அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசியத் தலைவர் மனோ கணேசன் அதை தவிர தனிப்பட்ட முறையில், சிறிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் ஆகிய எம்பீக்கள் என்னுடன் சில அரசியல் உரையாடல்களை நடத் தியுள்ளார்கள்.

கூட்டமைப்புக்கு வெளியே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எமது கட்சியுடன் அதிகாரபூர்வமாகவே உரையாடல்களை நடத்தியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பு தலைமை எமது கட்சியுடன் எந்த வித அரசியல் உறவையும் வைத்து கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஐக்கிய தேசிய கட்சியுடனும், முஸ்லிம் காங்கிரசுடனும் கூட்டமைப்பு தலைவர்கள், கூடி கலந்து மணிக்கணக்கில் உரையாடுவது எமக்கு தெரியும். ஆனால், எம்முடன் அத்தகைய உறவை அவர்கள் இதுவரையில் ஏனோ வளர்க்க வில்லை.

இதுதொடர்பில் முயற்சி செய்து, களைத்து நாம் இன்று அதுபற்றி அக்கறையை கைவிட்டு விட்டோம். இதுதான் உண்மை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.