புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
நாடு நெருக்கடிக்குள்ளான வேளையில் துணிவுடன் எதிர்ப்புக் குரல் கொடுத்த தமிழ்த் தலைவர்கள்

ஜெனீவாவில் இலங்கை மீதான பழியின் காரத்தைக் குறைத்தவர்கள்:

நாடு நெருக்கடிக்குள்ளான வேளையில் துணிவுடன் எதிர்ப்புக் குரல் கொடுத்த தமிழ்த் தலைவர்கள்

முத்து, திகாம்பரம், இராதாவுக்கு பலரும் பாராட்டுத் தெரிவிப்பு

எஸ். சுரேஷ்

ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக முழு நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமது கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டிய சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்க்கட்சிகள் மற்றும் தமிழ் பொது அமைப்புகள் பலவும் அரசிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆதரவாக தமது உணர்வுகளை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்கியமையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

குறிப்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் ஆகியோர் மேற்குலகிற்கும், அமெரிக்காவிற்கும் எதிராகக் காட்டிய உணர்வு பூர்வமான எதிர்ப்பு குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தமிழ்க் கூட்டமைப்பும், வெளிநாடுகளின் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் தமிழ்க் கட்சிகளாக இருந்தாலும் கூட எமது அரசாங்கத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான மேற்குலகின் தீவிர பிரசாரத்தை மழுங்கடிக்க இத் தமிழ்த் தலைவர்கள் ஆற்றிய சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு முன்பாகவும், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் இந்த மலையகத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கி அன்று ஜெனீவாவில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருந்த அபாண்டமான பழியின் காரத்தை வலுவிழக்கச் செய்தனர். அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், இத்தமிழ்க் கட்சிகள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை மற்றும் விசுவாசம் காரணமாகவே இதன் தலைவர்கள் தமது ரண ஆதரவை வழங்கினார்கள்.

இவர0களுடன் நாட்டுக்காகவும், நாட்டு இறைமைக்காகவும் இணைந்து குரல் கொடுத்த பிரதியமைச்சர் வி. முரளிதரன், வடக்கு கிழக்கிலே தமது ஆதரவை ஆர்ப்பாட்டங்கள் மூலமாக வெளிப்படுத்திய அமைப்பாளர்களான அங்கஜன், திருமதி இ. கீதாஞ்சலி உட்பட தமிழ் அரசியல்வாதிகளுக்கும் கல்விச் சமூகம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.