புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
'சவால்களை முறியடிப்பதென்பது நமக்கு புதியதொன்றல்ல!'

'சவால்களை முறியடிப்பதென்பது நமக்கு புதியதொன்றல்ல!'
 

அமைச்சர் பசில் ராஜபக்ஷ

(தொடர்)

350 ரூபாவுக்கு பசளையை கொடுக்கும் போது இது பொதுமக்களுக்காகச் செய்யும் ஒரு முதலீடு என்றே அரசு கூறியது. இன்றும் அவ்வாறு கொடுப்பதை ஒரு முதலீடாக நினைக்கிaர்களா?

ஆம். பசளை மானியத்தை நிறுத்தினால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். உற்பத்திச் செலவு அதிகரிக்கும் போது அரிசியின் விலையும் அதிகரிக்கும். மரக்கறிகளுக்கும் இவ்வாறு தான். இதேபோல் அந்த உற்பத்திச் செயன்முறை குறையலாம். இது ஒரு முதலீடாகும். இது எமது நாட்டின் முறையான ஒரு திட்டமாக செய்யப்படுகின்றது. ஏனைய நாடுகளும் இதை பல்வேறு பெயர்களால் அழைக்கின்றன.

நாம் இதை ஒரு மானியம் என்று கூறினாலும் அவர்களின் பெயர்கள் வித்தியாசமானது. நாம் இதை ஒரு திட்டமாகத் தான் செய்கிறோம். இது ஒரு முதலீடாகும். இம்முறை நாம் விவசாய அமைச்சின் ஆலோசனையின் பேரில் மண்ணின் போஷாக்குத் தன்மை பற்றி ஆய்வு செய்து சில பசளைகளின் அளவை மாற்றியமைத்தோம். அதற்கு பலர் ஒவ்வொரு விதமாக கூறினர். மண்ணின் போஷாக்குத் தன்மை அதிகரித்தால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

எனவே பசளை மானியம் ஒரு முதலீடே.

ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை என்ற திட்டத்தை எதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்தீர்கள்?

மஹிந்த சிந்தனையின் சில முக்கிய விடயங்களில் ஒன்று தான் கிராமத்தை அபிவிருத்தி செய்வது. விசேடமாக தனிமனிதன், குடும்பம், கிராமம் என்ற அம்சங்களினடிப்படையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். மக்கள் அதிகமாக இருப்பது கிராமங்களில் தான். எமது நாட்டு மக்களின் 80 வீதத்துக்கு அதிகமானோர் இருப்பது கிராமங்களிலும் தோட்டங்களையும் அண்டியே. கிராமத்துக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில்லை என்று எமக்கு தெரியும். அபிவிருத்தியோடு கவனமாக இருக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் கூறினார்கள். நகரமயமாக்கலோடு சூழல் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

நகரமயமாக்கலில் ஆறுகள், குளங்களும் அழிக்கப்படலாம். சமூக பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறினர். எனவே முடியுமானவரை நகரமயமாக்கலைக் குறைக்கும்படி கூறினர். ஜனாதிபதி கிராம எழுச்சி திட்டத்தின் மூலம் இதற்கு ஒரு தீர்வு வழங்கியிருக்கிறார். கிராமத்தில் வசதியின்மையாலேயே கிராமமக்கள் நகரத்துக்கு வருகின்றனர். கிராமத்துக்கு ஒரு பாதை இல்லாத போது பிள்ளைக்கு பாடசாலைக்கு செல்ல விவசாயிகளுக்கு தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியாது போகின்றது. எனவே கிராமத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. கிராமத்துக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது.

சகலருக்கும் மின்சாரம் மூலம் மகநகும மூலம் பாதைகள் விருத்தி செய்யப்பட்டன. தொலைத் தொடர்புச் சேவை முறை ஏற்படுத்தப்பட்டது. எனவே இன்று உலகில் எந்த இடத்தில் சேவைக்குப் போனாலும் தமது உறவினர்களுக்குப் பேசுவதற்கும் தொலை பேசி வசதிகள் இருக்கின்றன. இன்டர் நெட் மூலம் தொடர்புகொள்ளவும் முடிகிறது. அதற்கு நாம் முதலிடம் கொடுத்தோம். குடிநீர் பெற்றுக்கொடுத்தோம். பாடசாலைகள் விருத்தி செய்யப்பட்டன. கிராம சுகாதார மத்திய நிலையங்களை ஏற்படுத்தினோம். சிறிய விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்காக்கள், பாலர் பாடசாலை, மக்கள் மண்டபங்கள் போன்றன ஏற்படுத்தினோம்.

முன்னர் கிராமங்களில் காட்டு சில்லுகள் இருந்தன. அதற்கு சதுர வளைகள் என்று சொல்வோம். அதன் மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டது. முன்னர் வீடுகள் அமைக்கப்பட்டன. களிமண்ணைக் கொண்டே. இந்தக் காட்டிலிருந்து அவற்றிற்கும் விவசாயத்திற்கும் தேவையான பலகைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. அதனால் தான் இதற்கு சதுர வளை என்று சொல்லப்படுகின்றது. இப்போது எமது இந்த செயற்றிட்டம் மூலம் சகல கிராமங்களுக்கும் சிறிய பூந்தோட்டங்கள் அமைக்கின்றோம். எல்லாவற்றையும் அபிவிருத்தி செய்கிறோம். ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்பது ஒரு சிறந்த வேலைத்திட்டம். பல வருடங்களாக செய்து கொண்டு வந்த வேலைத்திட்டத்தின் முக்கியமான செயற்றிட்டத்தை தான் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செய்தார்.

ஒரு கிராமசேவகர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விஞ்சிய அபிவிருத்தியாக “ஒரு கிராமத்தில் ஒரு செயல்திட்டம்” எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே மக்கள் எப்படி இந்த செயற்றிட்டத்தோடு தொடர்பு கொள்வது?

கிராம எழுச்சி திட்டத்தில் மக்களின் ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவத்தை ஜனாதிபதி கொடுத்தார். நாம் மக்கள் ஒத்துழைப்பை ஆரம்பத்திலிருந்தே பெற்றுக்கொண்டோம். இந்த பிரேரணைகளை எடுக்கும் போதும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றோம். சங்கங்கள், கூட்டுத்தாபனங்களின் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி அரச உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் விவசாய அதிகாரி, பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் போன்றவைகளையும் அதற்காக தொடர்புபடுத்திக் கொண்டோம். எனவே இந்த திட்டங்கள் மக்களின் திட்டங்களாக மாறின. அப்படியில்லாதிருந்திருந்தால் இந்த திட்டங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினமானதாக இருந்திருக்கும். ஒரு திட்டம் அவசியமற்ற ஒன்று என்றால் அதற்கு மக்கள் சேர மாட்டார்கள். குறைபாடுகள் இல்லாமல் இல்லை என்றாலும் முடிந்தளவில் நடைமுறைப்படுத்த தீர்மானித்தோம்.

கிராம எழுச்சித்திட்டம் இதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் மேற்கொண்ட செயற்றிட்டங்களின் முன்னேற்றம் எப்படி?

கிராம எழுச்சி திட்டம் தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. அந்த அமைச்சின் அமைச்சராக இருந்தவர் ஜனாதிபதிதான். அதேபோல் பதிலமைச்சர்களும் இருந்தார்கள். இவர்கள் இருந்த ஆசனங்களில்தான் எமக்கு அதிக விருப்பு வாக்குகள் கிடைத்தன. கிராம எழுச்சி மூலம் பெரும் அபிவிருத்தியொன்று ஏற்பட்டது. மின்சாரம் வழங்கலில் சில மாவட்டங்களில் நூற்றுக்கு நூறு முழுமையடைந்துள்ளது.

இவையனைத்தும் கிராமப்புற மாவட்டங்கள். குடிநீர் விநியோகம், கால்வாய்களையமைத்தல், பாடசாலைகள் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. நாம் சென்ற வருட ஆரம்பத்தில் பாடசாலைகளில் மலசல கூடங்களை அமைத்தோம். அதற்குப் பிறகு பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை இணைத்துக் கொண்டு கிராம எழுச்சி ஊடாக பாடசாலைகளுக்கு 8300 மலசல கூடங்கள் அமைத்தோம். இந்நாட்டில் சுமார் 9700 பாடசாலைகள் இருக்கின்றன. அதன்படி 95 வீதம் பூர்த்தி செய்ய முடிந்தது. மனைப்பொருளாதார ஒன்றியங்களை திட்டமிடும் மாதமாக மார்ச் மாதம் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக இத்தினங்களில் நாட்டு மக்களின் வீடுகளுக்குச் சென்று மக்களின் கருத்துக்களை வினவுகிறோம். நாம் மனை பொருளாதார ஒன்றியம் என்று இதை சொல்கிறோம்

திவிநெகும செயல்திட்டத்தை நாம் போஷணை, உணவு பாதுகாப்பு, மேலதிக வருமானம் மற்றும் வாழ்க்கை செலவுகளைக் குறைத்தல் போன்ற பிரதான 4 விடயங்களை நோக்கமாகக் கொண்டு தான் ஆரம்பித்தோம். அதைத் தவிர நாட்டை கட்டியெழுப்ப பாரிய செயற்றிட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

சிறிய செயற்றிட்டங்களையும் ஆரம்பிக்க நாம் தீர்மானித்தோம். உதாரணமாக மிளகாயை இறக்குமதி செய்ய 5 பில்லியன் செலவாகும். ஆனால் ஒரு வீட்டில் 3 மிளகாய்க் கன்றுகள் என்ற அடிப்படையில் பயிரிடத் தேவையான வசதிகள் இருக்கின்றன. அதைத் தெரிந்து கொண்டு பயிரிடல், கால்நடை வளர்ப்பு போன்றவற்றை செய்யலாம். இவ்வகையில் இந்த வீட்டை பயிரிடலுக்கு உட்படுத்தி நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி தனிப்பட்டோரின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தவே நாம் முயற்சி செய்கிறோம்.

எமது நாட்டுக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையினால் எமது பயணம் தடைப்படுமா?

இது ஒரு தராசில் போட்டு நிறுப்பதைப் போன்றது. ஜனாதிபதி கெளரவமான வேலைத்திட்டமொன்றை மஹிந்த சிந்தனை மூலம் முன்வைத்தார். அது இடம் பெறுகின்றது. அன்றும் எங்களுக்கு பல அச்சுறுத்தல்கள் வந்தன. பல சந்தர்ப்பங்களில் தீர்மானங்களை எடுக்கும் போது சவால்கள் எழுந்தன.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் இல்லாமல் போனது. எமக்கு சமாதானத்தைக் கொண்டு வந்ததால் கிடைத்த பெறுபேறே அது. நாம் யூரோவை பார்ப்பதா இல்லாவிட்டால் எமது சுயாதிபத்தியத்தை கவனத்தில் கொண்டு மக்களின் கெளரவம், தன்னம்பிக்கையில் கீறல்கள் ஏற்படாமல் பார்ப்பதா என்று தீர்மானிக்க வேண்டும். ஆனால் நாம் மக்களுக்கும் நாட்டுக்கும் நஷ்டமேற்பட இடமளிக்கவில்லை. தனியார் துறையும் அரசும் ஒன்றிணைந்து தெளிவான ஒரு செயற்றிட்டத்தை தயாரித்து அதற்கு வெற்றிகரமாக முகம்கொடுத்தது. அதனால் நாம் எமது ஏற்றுமதி வீதத்தை அதிகரித்துக்கொண்டோம்.

சர்வதேச சவால்களை வெற்றி கொள்ளும் போது முன்னர் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து பார்த்துத்தானா முடிவுகளை மேற்கொண்டீர்களா?

இந்த யுகத்தில் மட்டுமல்ல முற்கால யுகங்களிலும் எமக்கு சவால்கள் இருந்தன. இன்று பல்வேறுபட்ட பெயர்களால் பல அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு எமக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். சில நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் இங்கு வந்து முறையற்ற செயல்களில் ஈடுபட்டார்கள். சர்வதேச நாணய நிதியம் மூலம் கடன் பெறச் சென்ற போது பல நாடுகள் இவ்விதமாக எதிர்த்தார்கள். பொருளாதார காரணிகள் மட்டுமே கடன்களைப் பெறுவதில் செல்வாக்குச் செலுத்தும் என்று கூறினார்கள். எனினும் அரசியல் சலுகைக்கு செல்வாக்கே காணப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐக்கிய இராச்சியம் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அதிலும் நாம் வெற்றி கண்டோம். அதன் பிறகு உலக வங்கியின் முதல் கட்டத்தில் வடக்குக்கு கடன் கொடுக்கும் போது இந்நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தோம். மனித உரிமைகள் சபையில் மட்டுமல்ல அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் நாம் முகங் கொடுத்தோம்.

இந்தியாவினதும் இலங்கையினதும் அண்மைக்கால இராஜதந்திர உறவுகளில் நீங்கள் சம்பந்தப்பட்டீர்கள். ஜெனீவா மனித உரிமைகள் சபை கொண்டு வந்த பிரேரணைக்கு இந்தியா எமக்கெதிராக தனது வாக்கைப் பிரயோகித்தது. அது தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?

இது எங்களைவிட அவர்களை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கின்றது. அமெரிக்கா கொண்டு வந்தது எமது நாட்டைப் பற்றிய ஒரு பிரேரணை. அதனால் நிச்சயமாக நாம் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்தியா முகம் கொடுத்தது அவர்கள் மேற்கொண்ட செயற்பாட்டுக்கு அல்ல. நாம் செய்யாத ஒரு செயற்பாட்டுக்கே. இந்தியா இப்போது கஷ்டத்தில் விழுந்திருக்கிறது. அவர்களின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்துக் கொள்வதில் பெரிய பிரச்சினையொன்றுள்ளது. அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தென்னிந்தியாவின் சில பிரிவினர் மத்திய அரசுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்தனர்.

அதேபோல் உள்நாட்டு ரீதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஒரு பாரிய பிரச்சினையாகும். இந்த பிரேரணையின் போது இந்தியாவைத் தவிர ஏனைய சகல நாடுகளும் இலங்கையோடு இருந்தன. மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு வாக்கு உரிமை இல்லாவிட்டாலும் தெளிவாகவே அவர்கள் இலங்கையோடு நின்று கொண்டனர். சார்க் நாடுகளுக்கப்பால் சென்று பார்ப்போமேயானால் ஆசியவிற்குள் எமக்கு ஜப்பானின் வாக்கு இல்லாவிட்டாலும் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன் எமக்கு வாக்களித்தனர். மலேசியா பிரேரணைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆசியாவின் சகல நாடுகளுக்கும் புறம்பான ஒரு தீர்மானத்தையே இந்தியா எடுத்தது. கூட்டுச்சேரா நாடுகளுக்கிடையே சர்வதேசத்துக்குள் இந்தியா ஒரு வசதியீனத்தையே ஏற்படுத்தியது. நாடுகளை மையமாக வைத்து கொண்டு வந்த பிரேரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று கூறியவர்கள் வேலைத்தேயத்துடன் ஒன்றுபட்டனர்.

இந்திய லோக சபையின் பாராளுமன்ற ஆசனங்களில் 542 இல் அரசுக்கு பாராளுமன்ற அங்கத்துவ ஆசனங்கள் 271 தான் இருக்கின்றன. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. மிரட்டியது. அவர்களுக்கு ஆசனங்கள் 18 இருக்கின்றன. இந்திய மத்திய அரசு வரவு செலவுத் திட்டமொன்றுக்கு போகத்தான் வேண்டும். இன்னும் 2 வருடங்களில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. பெருமளவு சிக்கலான உள்நாட்டு அரசியல் காரணங்களாலேயே இந்தியா இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

அவ்வாறு இருக்கலாம். ஆனால் இப்போது அந்நிலைமைக்கு நாம் இலங்கையை ஒப்பிட்டுப் பார்ப்போம். மனிதாபிமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து எமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. நாம் மிகக் கஷ்டத்தோடு தான் அதை செய்தோம். அப்போது ஏதோ ஒரு வகையில் சர்வதேசத்தை திருப்திப்படுத்த அல்லது வேறு நாடொன்றின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் செல்வாக்குக்கு நாம் தீர்மானம் எடுத்தால் தேசிய ரீதியில் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்போம். எமது நாட்டில் தீர்மானம் எடுக்கும் போது எமது நாடு பற்றி முதலிடம் கொடுத்தல் என்ற அடிப்படை இங்கு நன்கு தெளிவாகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.