புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
இந்திய எம். பி.க்கள் குழு நாளை கொழும்பு விஜயம்

இந்திய எம். பி.க்கள் குழு நாளை கொழும்பு விஜயம்

18ஆம் திகதி யாழில் ஆளுநருடன் சந்திப்பு

இலங்கைக்கு நாளை 16ஆம் திகதி வரவுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியையும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. வட பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தக் குழுவில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பல்பீர் புன்ஜ், பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் எம். கிருஷ்ணசாமி, மாணிக்க தாகூர், என். எஸ். வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன் ஜே. டி. சீலம் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கட்சியின் டி. கே. ரங்கராஜன், திரிணமூல் காங்கிரஸ் சுசாரு ரஞ்சன் ஹல்தர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரபி பெர்னார்ட், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டி. கே. எஸ். இளங்கோவன், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சிவானந்த் திவாரி, சமாஜவாதியில் இருந்து சைலேந்திரகுமார் ஆகியோருடன், பி. ஜு. ஜனதா தளத்தில் இருந்து சீதானந்த் மஹாபத்ராவும் ஆகியோர் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.