புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

1983 கறுப்பு ஜுலையில் தமிழர் உயிர்கள், பொருளாதாரம் அழிப்பு:
1981ல் யாழ். நூலகம் எரிப்பு:

ஐ.தே.கவுடன் இணைந்து மே தினமா? TNA யின் முடிவுக்கு பாரிய எதிர்ப்பலை

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போர்க்கொடியால் சிக்கலில் தவிக்கும் கூட்டமைப்பு

தமிழரின் கல்விப் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகத்தை 1981ல் எரித்தது மட்டுமல்லாது 1983ல் இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழரைக் கொன்று குவித்து அவர்களது பொருளாதாரத்தைச் சூறையாடியதுடன், இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இரட்டை வேடமிட்டுச் செயற்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழர் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொண்டாட எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் தமது பாரிய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

விவரம் »

இலங்கையின் சுதந்திரம், பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட்பு:

வெளிநாட்டுச் சக்திகளின் ஆக்கிரமிப்புக்களின் போது சிங்கள மக்களின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்கள்

அன்பும், ஆதரவும் வழங்கும் சமூகம் என ஜனாதிபதி மஹிந்த பாராட்டு
 

வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதி களின் ஆக்கிரமிப்புக்க ளின் போது முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் பக்கம் நின்று ஆதரவு நல்கியுள்ளனர். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த போதும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்புச் செய்தனர்.

விவரம் »

 

பலஸ்தீன ஜனாதிபதி இன்று வருகிறார்

பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இன்று 15ம் திகதி முதல் 3 நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுக ளுக்கும் இடையிலான உறவை வளப்படுத்தும் வகையிலான பல்வேறு சந்திப்புகளை அவர் இங்கே மேற்கொள்ளவுள்ளார்.

விவரம் »

அரசாங்கம் மீது பழி சுமத்துவது TNAயின் வழமையான ஒன்று!

தமிழ் மக்களுக்கும் இன்று இது நன்கு தெரியும்

அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவது என்பது தமிழ்க் கூட்டமைப்பின் வழமையான ஒரு விடயம். இது இன்று தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும். செய்திக்கு ஒன்றுமில்லாத பட்சத்தில் ஊடகங்கள் அரசுடனான பேச்சு எப்படி என்று கேட்க, அரசை வசைபாடி அறிக்கை விடுவது கூட்டமைப்பினரது வழமையானதொரு விடயம் என்று அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். அதனால் இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

விவரம் »

சங்கக்காரவுக்கு விஸ்டனின் இரண்டு உயர் விருதுகள்!

பாபு சர்மா, ஹசன் மெளலானா தெரிவிப்பு


புகழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் 2011ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவ்வருடத்தின் உலகின் முன்னிலை கிரிக்கெட் வீரராகவும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இத்தெரிவுகள் அறிவிக்கப்பட்டன.

விவரம் »

இந்திய எம். பி.க்கள் குழு நாளை கொழும்பு விஜயம்

18ஆம் திகதி யாழில் ஆளுநருடன் சந்திப்பு

இலங்கைக்கு நாளை 16ஆம் திகதி வரவுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியையும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

விவரம் »

கட்சிகள் வேறுபடினும் நாங்கள் இணைந்திருப்பது ஒரே அரசின் கீழ்

அபிலாஷைகளை வென்றெடுக்க ஒன்றுபடுமாறு ஹக்கீம் கோரிக்க

நாங்கள் பல கட்சிகளாக இருந்தாலும் ஒரு அரசின் கீழ் இருக்கிறோம். இதனால் வேற்றுமைகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றுசேருவதன் மூலமே எமது அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்று நீதி அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

விவரம் »

பேச்சுக்கான அறிகுறி எதுவுமில்லையாம் அரசாங்கத்தைச் சாடுகிறார் சம்பந்தன்!

கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

பேச்சு உடனடியாக ஆரம்பிக்கும் அறிகுறி எதுவும் இல்லை, அரசுதான் பேச்சுக்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் . . . . . .

விவரம் »

 

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.