புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

ALLIED TRADING INTERNATIONAL (PVT) LTD

ALLIED TRADING INTERNATIONAL (PVT) LTD

80 ஆண்டுகளுக்கும் மேலாக

வர்த்தகத்துறையில் தனித்துவ முத்திரை!

தேசிய கலை - கலாசார நலன்களில் அக்கறை
நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் சப்ரி இப்திகார் அஹ்மட்

1930 ஆம் ஆண்டு மர்ஹ¥ம் அல்ஹாஜ் முஹம்மத் தாஹிர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ALLIED TRADING AGENCY தற்போதைய தலைவர் அல்ஹாஜ் இப்திகார் அஹமட் நிர்வாகத்தில் 1970 ஆம் ஆண்டளவில் ALLIED TRADES INTERNATIONAL எனப் பெயர் மாற்றம் பெற்று மூன்றாவது தலைமுறைக்கு முன்னெடுத்துச் சென்றது.

வியாபாரச் சேவை விஸ்தரிப்பின் நிமித்தம் புதிய உத்வேகத்துடன் 2002 ஆம் ஆண்டில் ALLIED TRADING INTERNATIONAL (PVT) LTD என வரையறுக்கப்பட்ட நிறுவனமாக தரமுயர்ந்து வியாபாரத் துறையில் தனித்துவ முத்திரையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

நாடளாவிய ரீதியில் நீர் விநியோகக் குழாய் அதன் உதிரிப் பாகங்க ளை 35 - 40 வீதம் தொடராக வழங்குவதில் முன்னோடிகளாக விளங்குகிறார்கள். 2010 ஜுலை மாதத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்று ISO 9001 TQM நற்சான்றிழுக்கு உரித்தாகி இங்கிலாந்து “UKAS” அமெரிக்கா”ANAB” தரச் சான்றிதழ் பெற்று இலங்கையின் பிரபல முன்னணி நிறுவனமாக பிரகாசிக்கின்றது.

நிர்வாகத் திறன், தாமதமில்லா தரமான பொருள் விநியோகம், விசாலமான பொருளகத்தையும் உள்ளடக்கியுள்ள இந்நிறுவனம் ISO 900: - 2008 அங்கீகாரத்தையும் அண்மையில் சுவீகரித்துக் கொண்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் நீர்க்குழாய் வடிகாலமைப்புக்குத் தேவையான அத்தனை உதிரிப் பாகங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

சர்வதேச பொருள் தரக் கணிப்பீட்டாளர்களின் பரிசீலனைக்கமைய தேசிய, சர்வதேச உயர்தர சான்றிதழ்களைப் பெற்று 75% வீத வாடிக்கையாளர்களின் பெருமதிப்பைப் பெற்றுத் திகழ்கிறது. உள்ளூர் கம்பனிகளும், உள்நாட்டில் இயங்கும் வெளியூர் கம்பனிகளும் இவர்களது நீண்டகால வாடிக்கையாளர் களாக விளங்குவதோடு பல்வேறு அளவுகளிலான உலோக உதிரிப் பாகங்களும் தடையின்றி வழங்கப் பெற்று வருகின்றன. இங்கிலாந்து, ஜப்பான், தாய்வான், ஒஸ்ரியா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தரமான பொருட்களை இறக்குமதி செய்து தாமதமின்றி விநியோகித்து வருகின்றனர்.

National Water Supply & Drainage Board  கடந்த 35 ஆண்டுகளாக ALLIED TRADING INTERNATIONAL (PVT) LTD நிறுவனத்திடமிருந்தே சகல பொருட்களையும் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் தனித்துவமான முத்திரைப் பதித்து நாணயம் - நம்பிக்கை - உயர்தரம் - உத்தரவாதம் என உன்னத இலக்கை அடைந்து வியாபாரத் துறையில் வீறுநடை போடுகிறது.

தேசிய சமூக நலன்களில் அக்கறையுள்ள இந்நிறுவனம் கலை கலாசார ஊக்குவிப்புகளிலும் தன்னை அர்ப்பணித்து வருகின்றது.

அல்ஹாஜ் இப்திகார் அஹ்மட் தலைமைத்துவத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் சப்ரி இப்திகார் அஹ்மட் இணைந்து கரம் கோர்த்து சமூக சேவைகளில் பங்களிப்பு வழங்கி வருகிறார்.

அண்மையில் ஊடகவியலாளர்களுக்கான மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு பூரண அனுசரணை வழங்கி கலை ஆர்வலர்கள் என்பதை நிரூபித்தமை பாராட்டுக்குரிய பணியாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.